ஆளுநருடன் சுமூக உறவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தனக்கும் சுமூகமான உறவு இருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 18, 2022, 11:50 AM IST
  • ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் சுமூக உறவு
  • கிடப்பில் கிடக்கும் நீட் மசோதா
  • சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேச்சு
ஆளுநருடன் சுமூக உறவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! title=

தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றதை அடுத்து நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் ரவி தொடர்ந்து காலம் தாழ்த்திவருகிறார். இதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

கடந்த 14ஆம் தேதிகூட அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்து நீட் விலக்கு மசோதா தொடர்பாக பேசினர். சந்திப்பை முடித்துவிட்டு வெளியே வந்த சுப்பிரமணியன், “நீட் விலக்கு தொடர்பாக ஆளுநர் தற்போதும் எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை” என கூறினார்.

Ravi

மேலும், அன்றைய தினம் ஆளுநரின் தேநீர் விருந்தையும் ஆளுங்கட்சியான திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் புறக்கணித்தன. இந்த விவகாரம் பெரும் விவாதத்தை எழுப்பியது. அதுமட்டுமின்றி ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தது சரிதான் என ஒரு தரப்பினரும், இது முற்றிலும் தவறானது என மற்றொரு தரப்பினரும் கூறினர். அந்த விருந்தில் அதிமுக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பாஜக சார்பில் ராஜ்யசபா எம்.பி. ஆகிறார் இளையராஜா..! அதுவும் எந்த ரூட்டில் தெரியுமா?

இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தனிப்பட்ட முறையில் ஆளுநருக்கும், எனக்கும் சுமூக உறவு இருக்கிறது; நான் ஆட்சி நடத்தும் விதத்தை பொதுமேடையிலேயே அவர் பாராட்டி பேசியிருக்கிறார்;

ஆளுநருக்கு உண்டான மரியாதையை தொடர்ந்து வழங்குவோம். ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் நீட் விலக்கு மசோதா 210 நாட்களாக ஆளுநர் மாளிகையில் கவனிப்பாரன்றி முடங்கிக்கிடக்கின்றது” என்றார்.

மேலும் படிக்க | டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் தேவை: அன்புமணி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News