சித்ரா பௌர்ணமி: திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

சித்ரா பௌர்ணமியையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Apr 24, 2024, 03:50 PM IST
  • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்ரா பௌர்ணமி.
  • பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சித்ரா பௌர்ணமி: திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் title=

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் (Tiruchendur Murugan Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது. இக்கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்றது. இது தேவார வைப்புத்தலமாகக் கருதப்படுகிறது. இக்கோயில், 2000-3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது. முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோயில் இதுவாகும். இக்கோயில் அமைந்துள்ள இடம் “திருச்சீரலைவாய்” என முன்னர் அழைக்கப்பட்டது.

இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை மாத வசந்த திருவிழா கடந்த 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 ஆம் திருநாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 4:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

மேலும் படிக்க | அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு! காரணம் என்ன?

பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் தங்கச்சப்பரத்தில் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி, தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தில் 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்கத்தேரில் எழுந்தருளி கிரிபிரகாரம் வலம் வந்து கோவிலை சேர்ந்தார்.

மேலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். அதன்படி நேற்று ஏராளமான பக்தர்கள் நேற்று காலையில் இருந்தே கோவிலில் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவில் ஏராளமான பக்தர்கள் கடற்கரையில் அமர்ந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | சாதிய கொலை வழக்கு! கணவன் கொலை-மனைவி தற்கொலை..மனதை உலுக்கிய கடைசி கடிதம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News