சீமானின் அப்பா காலமானார், முதல்வர் ஸ்டாலின் கண்ணீர் அஞ்சலி

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் நடிகரும் இயக்குநருமான சீமானின் தந்தை நேற்று காலமானார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 14, 2021, 06:02 AM IST
  • நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் நடிகரும் இயக்குநருமான சீமானின் தந்தை காலமானார்
  • வயது முதிர்வினால் சீமானின் தந்தை செந்தமிழன் நேற்று காலை காலமானார்
  • சீமானிடம் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்
சீமானின் அப்பா காலமானார், முதல்வர் ஸ்டாலின் கண்ணீர் அஞ்சலி title=

சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் நடிகரும் இயக்குநருமான சீமானின் தந்தை நேற்று காலமானார். 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை வயது மூப்பின் காரணமாக தந்து சொந்த ஊரில் உயிரிழந்தார். சீமானின் தந்தையின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் சிவகங்கை மாவட்டத்தில் இயற்கை எய்தினார். வயது முதிர்வினால் செந்தமிழன் நேற்று காலை காலமானார். 

Also Read | 16 மனைவிகள் 151 குழந்தைகள், அடுத்த திருமணத்திற்கு ரெடி! 

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள அரணையூரில் வசித்து வந்த செந்தமிழன் வயோதிகம் காரணமாக காலமானார். சீமானின் அப்பாவின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

சீமானிடம் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். சீமானிடம் பேசிய முதலமைச்சர், “தைரியமாக இருங்கள்.. கலங்க வேண்டாம்” என்று ஆறுதல் கூறினார். முதல்வரின் ஆறுதல் வார்த்தைகளைக் கேட்ட சீமான், நீங்கள் என்னுடன் துணையாக இருப்பது நெகிழ்ச்சித் தருகிறது என்று மனம் உருகி நன்றி தெரிவித்தார்.

நீங்கள் இப்போது என்னுடன் இருப்பது நம்பிக்கையைக் கொடுக்கிறது, பெருமையாக இருக்கிறது என்று சீமான் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதை சொல்லும்போது சீமான் அழுது கண்ணீர் விட்டது அனைவருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

கலங்கிய சீமானுக்கு தைரியம் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், தைரியமாக இருங்கள், அதற்கான நேரம் இது என்று ஆறுதல் தெரிவித்தார். 

Also Read | கொரோனா பாதிப்பு: சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு

பிறகு சீமானின் தந்தையைப் பற்றி விசாரித்த முதலமைச்சர், தந்தை செந்தமிழனுக்கு கொரோனா பாதிப்பு இருந்ததா என்று விசாரித்தார். அதற்கு பதிலளித்த சீமான், தந்தைக்கு கொரோனா பாதிப்பு இல்லை, வயோதிகத்தினால் இறந்துவிட்டார் என்று தெரிவித்தார்.

தந்தையின் உடலை சொந்த ஊரில் நல்லடக்கம் செய்ய முடிவு செய்திருப்பதாக தெரிவித்த சீமான், தங்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.  
சீமானின் தந்தை மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்ததோடு, அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

Also Read | முதலமைச்சர் நிவாரண நிதிக்கு Rs 1 கோடி கொடுத்த நடிகர் சிவக்குமாரின் குடும்பம்

” சீமான் அவர்களின் தந்தையார் செந்தமிழன் அவர்களின் மறைவுச் செய்தி வேதனை தருகிறது. அவரை இழந்து துயரத்தில் இருக்கும் சீமானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதேபோல், பல திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சீமானின் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சீமானின் தந்தை செந்தமிழனின் இறுதிச் சடங்குகள் இன்று அவரது சொந்த ஊரில் நடைபெறவிருக்கிறது.

Also Read | தமிழ் பஞ்சாங்கம் 14 மே, 2021: வெள்ளிக்கிழமை இன்றைய நல்ல நேரம், சுப ஹோரைகள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News