சென்னை: செங்கல்பட்டு, பூஞ்சேரி பகுதியில் வாழும் நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இன மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் (Chief Minister of Tamil Nadu) மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு ரூ. 4.53 கோடி மதிப்பீட்டிலான வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister M K Stalin) இன்று வழங்கினார்.
அதனையடுத்து பயிற்சிக்கான ஆணைகள், வங்கி கடனுதவி, அங்கன்வாடி வகுப்பறைகள் கட்டும் ஆணைகளை, 33 நபர்களுக்கு சிறுதொழில் தொடங்குவதற்காக தலா ரூ.10,000 வீதம் ரூ.3.30 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. மேலும் 12 நபர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீதம் 12 லட்சம் ரூபாய் கடனுதவியை முதல்வர் அளித்தார்.
6 பேருக்கு முதியோர் உதவித் தொகை; 21 பேருக்கு குடும்ப அட்டை, 88 பேருக்கு சாதிக் சான்றிதழ் வழங்கப்பட்டது. 34 பேருக்கு நரிக்குறவர் நலவாரிய அட்டைகள், 25 நபர்களுக்கு பழங்குடியினர் நலவாரிய அட்டைகளையும் முதல்வர் வழங்கினார்.
ALSO READ | இலங்கை தமிழருக்காக தமிழக அரசு என்றும் துணை நிற்கும்: முதல்வர் உறுதி
பின்னர் அவர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தங்களது மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதமாக தாங்கள் உருவாக்கிய பாசிமணி மாலையை அவருக்கு அணிவித்து மகிழ்ந்தனர்.
முன்னதாக கோவில் அன்னதானத்தில் இவர்களை சாப்பிட அனுமதிக்கவில்லை என கூறிய பெண்மணி மற்றும் இப்பகுதி மக்களுடன் இவர்கள் புறக்கணிக்கப்பட்ட கோவிலில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் உணவரிந்தியது வெகுவாக மக்களால் பாராட்டப்பட்ட நிலையில் தற்போது அவர்களுக்கு நலத்திடங்களையும் தமிழக அரசு (Government of Tamil Nadu) வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | பழங்குடியின மக்களின் நலனுக்காக ரூ.1 கோடி வழங்கிய நடிகர் சூர்யா!
இதுக்குறித்து தனது தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாடு முதல்வர் கூறியதாவது,
அதனைத்தான், "நடமாடும் கோயில் திருப்பணியைத்தான் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் செய்கிறது" என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார்.
திராவிட இயக்கம் உருவாகி நூறாண்டுகளைக் கடந்திருக்கலாம். ஆனால் காலம் என்ற பெருவெளியில் நூறாண்டு என்பது கைக்குழந்தையே! pic.twitter.com/oJjBuvro1S
— M.K.Stalin (@mkstalin) November 4, 2021
இதேபோல் இரண்டுவார காலத்துக்கு தமிழ்நாடு முழுவதும் இம்மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட உத்தரவிட்டுள்ளேன். pic.twitter.com/7GGamKJtpf
— M.K.Stalin (@mkstalin) November 4, 2021
ALSO READ | குற்றம்சாட்டிய பெண்ணுடன் சேர்ந்து உணவருந்திய அமைச்சர் சேகர்பாபு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR