1.80 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர்!

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், திருக்கோவிலூரில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டடம் மற்றும் கீழ்பென்னாத்தூரில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

Last Updated : Aug 16, 2019, 06:43 PM IST
1.80 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர்! title=

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், திருக்கோவிலூரில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டடம் மற்றும் கீழ்பென்னாத்தூரில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

மேலும், பதிவுத்துறையில் நகர்ப்புரப் பகுதிகளில் ஆவணப்பதிவு செய்தவுடன் பட்டா மாறுதலுக்கான படிவங்களை கணினி மூலம் மாற்றம் செய்யும் ளுகூஹசு 2.0 மென்பொருள் விரிவாக்க திட்டத்தையும் துவக்கி வைத்தார்கள்.

வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலகங்களில், ஆவணங்களைப் பராமரிப்பதற்கும், பணியாளர்கள் திறம்படப் பணியாற்றுவதற்கும், போதிய இடவசதி இல்லாததை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் அதிகம் வந்து செல்கின்ற வணிகவரி மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்களில்
பொதுமக்களுக்கு தக்க வசதிகள் அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் கருதியும், வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் அனைத்து வணிகவரி மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சொந்த கட்டடங்கள் கட்டும் திட்டத்தினை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டடம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம், என மொத்தம் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலகக் கட்டடங்களை தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும், பதிவுத்துறையில் ஆவணப் பதிவுகளை முற்றிலும் கணினி மயமாக்கும் STAR 2.0 மென்பொருள் 12.8.2018 அன்று தமிழ்நாடு முதல்வரரால் துவக்கி வைக்கப்பட்டு, பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதன்மூலம், கிராமப் பகுதிகளில் ஆவணப் பதிவு செய்தவுடன் பட்டா மாறுதலுக்கு தேவையான படிவங்கள் கணினி மூலமாகவே வருவாய்த் துறைக்கு அனுப்பப்படுகின்றன. தற்போது இந்த வசதியை நகர்ப்புர பகுதிகளுக்கும், விரிவுபடுத்தும் நோக்கில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் நகர்ப்புரப் பகுதிகளில் ஆவணப்பதிவு செய்தவுடன் பட்டா மாறுதலுக்கான படிவங்களை கணினி மூலம் மாற்றம் செய்யும் STAR 2.0 மென்பொருள் விரிவாக்க திட்டத்தை துவக்கி வைத்தார்கள்.

இதன்மூலம், நகர்ப்புர பகுதிகளில் ஆவணப்பதிவு செய்தவுடன் பட்டா மாறுதலுக்கு தேவையான படிவங்கள் சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அலுவலகங்களுக்கு கணினி மூலமாகவே அனுப்பப்படுவதால் காலதாமதம் தவிர்க்கப்படுவதுடன், பட்டா மாறுதல் பணியும் விரைவில் நடைபெறும்.

வணிகவரி அலுவலகங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், இவ்வலுவலகங்களின் பாதுகாப்பு கருதியும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள 9 வணிகவரித்துறை அலுவலகங்களில் 1 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள ஊஊகூஏ கேமராக்களின் செயல்பாடுகளை மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் திரு.சி.வி. சண்முகம், மாண்புமிகு வணிகவரித் துறை அமைச்சர் திரு.கே.சி.வீரமணி, தலைமைச் செயலாளர் திரு.க.சண்முகம், இ.ஆ.ப., வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மைச் செயலாளர் திரு.கா.பாலச்சந்திரன், இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர்/வணிகவரி ஆணையர் முனைவர் திரு.டி.வி.சோமநாதன், இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் முனைவர் கொ. சத்யகோபால், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Trending News