சென்னை அடையார் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி எதிரே பேருந்து நிலையத்தில் நின்று போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவ்வழியாக சாலையில் வந்து கொண்டிருந்த மூன்று பெண்கள் ஒரே வாகனத்தில் பயணித்துள்ளனர். இவர்களை மடக்கி பிடித்த போக்குவரத்துகாவலர் ராஜேஷ் இது குறித்து விளக்கம் கேட்டபோது உடல்நிலை சரியில்லை என கூறி அங்கிருந்து வேகமாக தனது ஆண் நண்பர்களுடன் வாகனத்தை எடுத்து புறப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
இதை கண்டு அருகில் டீ கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்த சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த அருண் குமார் விக்ரம் இந்த மூன்று பெண்களையும், அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தையும் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பெருநகர சென்னை மாநகர காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். மூன்று பேர் பயணித்த வாகனத்தில் புகைப்படம் எடுத்ததை அறிந்த ஒரு பெண் அங்கு டீ குடித்திருந்த அருண் குமார் விக்ரமை நோக்கி வந்து எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் அவரை தாக்கி, ஆபாசமாக பேசி நடு ரோட்டில் பொதுமக்கள் இருக்கும்பொழுது செருப்பை கழட்டி அடித்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக அங்கு பணியில் இருந்த போக்குவரத்துக் காவல்துறை காவலர் ராஜேஷ் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தார். பின்னர் போக்குவரத்து காவலர் ராஜேஷ் முன்பே மூன்று பேருடன் அதே வாகனத்தில் பயணிக்க முயன்ற போது போக்குவரத்து காவலர் ராஜேஷ் மூவரையும் தனது பாணியில் மிரட்டி வாகனத்தை தள்ளி செல்லும் படி கூறியுள்ளார். தொடர்ந்து தனது தொலைபேசியில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த அருண்குமார் விக்ரமிடம், தான் போலீசாரின் மகள் என்றும் தன்னை புகைப்படம் எடுத்து ஒன்னும் செய்ய முடியாது என்று மிரட்டி, தன்னை எவ்வளவு வேணாலும் புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்று மிரட்டிவிட்டு சென்றுள்ளார்.
(@V) July 5, 2023
உடனே தன்னை தாக்கிய மூன்று பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் அருண்குமார் விக்ரம் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதை அடுத்து முதற்கட்டமாக அந்த இருசக்கர வாகன பதிவெண் அடிப்படையில் ஹெல்மட் அணியாமல் அணிந்து வந்த்தற்க்காக 1000 ரூபாய் அபராதமும் இரு சக்கர வாகன மூன்று பேர் வந்தததின் அடிப்படையில் 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், செருப்பால் அடித்தத்றக்கும் காலால் எட்டி உதைத்தற்கு அபிராமபுரம் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று இளைஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க | Tomato price: தக்காளி விலை எப்போது குறையும்? வெளியான அதிர்ச்சி தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ