சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. பல நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கு மேல் சென்றது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இன்று காலை திடீரென இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் நேற்று தெரிவித்தது.
இந்நிலையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் இன்று காலை முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சென்னை புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, ஆலந்தூர், கிண்டி, பெரியமேடு, அசோக்நகர், கோடம்பாக்கம், விருகம்பாக்கம் மற்றும் அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதேபோல், திருவள்ளூரில் புழல் செங்குன்றம், பொன்னேரி மற்றும் பட்டாபிராம் போன்ற பகுதிகளிலும் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.
Tamil Nadu: Chief Minister Edappadi Palaniswami has announced a complete lockdown in Chennai from April 26 to April 29, between 6 AM & 9 PM. Visuals from Koyambedu bridge. pic.twitter.com/T2CedLujhO
— ANI (@ANI) April 26, 2020
பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மின் கம்பங்கள் சாய்ந்து பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது.