மழை நீரில் மூழ்கி இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு!

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம்,பல்லாவரம், ஊரப்பாக்கம் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழையானது பெய்து வருகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 31, 2022, 09:46 PM IST
  • தாம்பரம், பல்லாவரம், ஊரப்பாக்கம் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழையானது பெய்து வருகிறது.
  • இரண்டு வயது சிறுமியின் உடல் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது.
  • காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மழை நீரில் மூழ்கி இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு! title=

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம்,பல்லாவரம், ஊரப்பாக்கம் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழையானது பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம் ஐய்யஞ்சேரி நேதாஜி நகர் பகுதியில் வசித்து வருபவர் சத்யராஜ் மணிமாலா தம்பதியினர் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். 

இந்நிலையில் சத்யராஜ் வேலைக்கு சென்று இருக்க அவரது மனைவியும் வேலை முடித்துவிட்டு களைப்பில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர்களது வீட்டில் வெளியே விளையாடிக் கொண்டிருந்த அவர்களது இரண்டு வயது மகள் ஷாலினி மாயமாகியுள்ளது அறிந்து அவரை தீவிரமாக தேடிய நிலையில், அவர்களது வீட்டு வெளியே குடிநீர் தண்ணீருக்காக கட்டப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் தேங்கி இருந்த மழை நீரில் ஷாலினி உடல் பிரேதமாக கண்டறியப்பட்டுள்ளது.

தண்ணீரில் குழந்தை இருப்பதைக் கண்டு அவரது தாய் கதறி அழுது பின் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஷாலினி யை கொண்டு சென்ற போது உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இருந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | மேட்டூர் அணையில் நீர் வெளியேறும் அளவு ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஆகா உயர்வு! 

சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். துள்ளி குதித்து விளையாடி கொண்டிருந்த இரண்டு வயது சிறுமியின் உடல் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | தங்கையின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணன் - காருக்கு தீ வைத்த பயங்கரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News