Chennai Rain: மழைநீரில் மின்சாரம் பாய்ந்து கால்நடைகள் இறந்தன

மழைநீரில் கால் வைத்த கால்நடைகள் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் சென்னையில் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 18, 2021, 08:31 PM IST
  • மழைநீரில் மின்சாரம் பாய்ந்து கால்நடைகள் இறப்பு
  • சென்னையில் சோகச் சம்பவம்
  • 5 கறவை மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன
Chennai Rain: மழைநீரில் மின்சாரம் பாய்ந்து கால்நடைகள் இறந்தன title=

சென்னை: சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழையால், ஆங்காங்கே மழைநீர் குளம் போல் தேங்கிக் கிடக்கிறது. அதனால், நோய்த்தொற்று பரவும் அபாயம் அதிகமாகியிருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தேங்கி நின்ற மழைநீர் (Rain Water) மற்றுமொரு சோகச் சம்பவத்துக்கு காரணமாகியிருக்கிறது. மழைநீரில் கால் வைத்த கால்நடைகள் மின்சாரம் தாக்கி இறந்தன

சென்னையில் தாழ்வான பகுதியான மேடவாக்கத்தைச் சேர்ந்த பால் வியாபாரி ஆதிகேசவன். அவர் தனது மாடுகளைக் கொண்டு தான் வாழ்க்கை நடத்தி வருகிறார். ஆதிகேசவனின் ஐந்து கறவை மாடுகள் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டன. ஆனால், சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்யப்பட்டதால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

மழை

கனமழை மற்றும் வெள்ளத்திற்கு மத்தியில் கால்நடைகளை இழந்து வருத்தத்தில் ஆழ்ந்துள்ள ஆதிகேசவனைப் போல மழையினால் பலரும் தங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
தேங்கி நிற்கும் மழை நீரில் (Chennai Rain) மின்சார கேபிள் விழுந்துவிட்டதாக மேடவாக்கம் பாபு நகரில் வசிப்பவர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்த விஷயம் சிறிது நேரத்தில் அருகில் இருந்தவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. விஷயம் தெரிந்த பால் விற்பனையாளர் ஆதிகேசவன் தண்ணீரில் இறங்காமல் ஒதுங்கி நின்றார். ஆனால், அவரது கால்நடைகள் தண்ணீரில் கால் வைத்ததுமே, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

இதைத் தொடர்ந்து, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் மற்றும் மின்சாரத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.  இறந்த மாடுகளின் சடலங்களும் மீட்கப்பட்டது. 
மழை, பெய்யும் போது மட்டுமல்ல, அதன் பிறகு, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதற்கு கறவை மாடுகள் பலியாகியிருப்பதை உதாரணமாகச் சொல்லலாம்.

ALSO READ | சென்னையில் எப்போது நிற்கும் மழை? வானிலை ஆய்வு மையம் தகவல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News