சென்னை நாவலூர் சுங்கச்சாவடி சுங்க கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகளுக்கு ஷாக்

Chennai OMR Navalur Toll Plaza: ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள நாவலூர் சுங்கச் சாவடியில் இன்று முதல் (ஜூலை 1) சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 1, 2022, 01:07 PM IST
  • நாவலூர் சுங்கச் சாவடியில் இன்று முதல் (ஜூலை 1) சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
  • வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சி.
  • வாகன ஓட்டிகளுக்கு சுங்கச் சாவடி ஊழியர்கள் மூலம் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
சென்னை நாவலூர் சுங்கச்சாவடி சுங்க கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகளுக்கு ஷாக் title=

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை அதாவது ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள நாவலூர் சுங்கச் சாவடியில் இன்று முதல் (ஜூலை 1) சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

முன்னதாக, ஓ.எம்.ஆர் சாலையில் நாவலூர் சுங்கச் சாவடியில் சுங்க கட்டணம் அதிகரிக்கப்படும் என்ற தகவலை தொழில்நுட்ப அதிவிரைவு சாலை திட்ட தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஆகியோர் அளித்தனர். மேலும் கட்டண உயர்வு பற்றி வாகன ஓட்டிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில், வாகன ஓட்டிகளுக்கு சுங்கச் சாவடி ஊழியர்கள் மூலம் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. 

சென்னையில் உள்ள ஓ.எம்.ஆர் சாலை மிக பிசியான சாலைகளின் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. 1999 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த பகுதியில் பன்னாட்டு நிறுவனங்கள் அதிகரிக்கத் தொடங்கின. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த பகுதிக்கு படையெடுத்த நிலையில், ஓ.எம்.ஆர் சாலை சென்னையின் ‘ஐடி ஹப்’ ஆக மாறியது. 2008 ஆம் ஆண்டு இது ‘ஐடி எக்ஸ்பிரஸ்வே’ ஆனது.

மேலும் படிக்க | ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி குண்டார் சக்திவேல் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக்கொலை

இந்த பகுதியில் நிறுவனங்களுடன் ஊழியர்களுக்கான குடியிருப்புகள், கேளிக்கை தளங்கள் என பலதரப்பட்ட முன்னேற்றங்கள் ஏற்பட்டன. ஓ.எம்.ஆர் சாலை உலக தரத்தில் சீரமைக்கப்பட்டு அந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கனவு பாதையாக மாறியது. பிஸியான ஓ.எம்.ஆர். சாலையில், பெருங்குடி, நாவலூர், துரைப்பாக்கம், மேடவாக்கம், அக்கறை ஆகிய பகுதிகளில் 5 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், நாவலூர் சுங்கசாவடியில் 2036ம் ஆண்டு வரை சுங்கக் கட்டணம் வசூலிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் சுங்க கட்டணத்தை அதிகரிக்க அனுமதி உள்ளது. அதன்படி இன்று, அதாவது ஜூலை 1 முதல் இந்த சாலையில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

உயர்த்தப்பட்ட கட்டண விவரம்:

கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கான கட்டணம் - ரூ.30-ல் இருந்து ரூ. 33 ஆக உயர்வு
இலகு ரக வணிக வாகனங்களுக்கான கட்டணம் - ரூ.49-ல் இருந்து ரூ.54 ஆக உயர்வு
பேருந்துகளுக்கான கட்டணம் - ரூ.78-ல் இருந்து ரூ.86-ஆக உயர்வு
சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் - ரூ.117-ல் இருந்து ரூ.129-ஆக உயர்வு
கார், ஜீப், ஆட்டோ ஒரு முறை சென்று திரும்ப - ரூ. 22
கார், ஜீப், ஆட்டோ ஒரு நாளில் பல முறை பயணிக்க - ரூ. 37
கார், ஜீப், ஆட்டோ மாதம் முழுவதும் பயணிக்க பயண அட்டை - ரூ. 345
சரக்கு வாகனங்கள் மாதம் முழுவதும் பயணிக்க - ரூ. 3365

மேலும் படிக்க | மீண்டும் 2 ஆயிரத்தைக் கடந்த தமிழக கொரோனா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News