எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளி தினத்தன்று சென்னை மெட்ரோ கட்டணத்தை 50% குறைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் அதிகரித்து சாலை போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பெரும்பான்மை மக்கள் ரயில், மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். தங்களது வாடிக்கையாளர்களை கவர சென்னை மெட்ரோ தொடர்ந்த பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது தீபாவளி பண்டிகை தினத்தன்று சென்னை மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளுக்கு 50% கட்டண சலுகை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது. விடுமுறை நாட்களில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணியர் எண்ணிக்கையை அதிகரிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
தீபாவளி தினம் தமிழகத்திர் வரும் ஞாயிறு (அக்டோபர் 27) அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்றைய தினம் சென்னை மெட்ரோவில் பயணிக்கும் நபர்களுக்கு 50% கட்டண சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும வாரங்களில் ஞாயிறு விடுமுறை நாளில் 50% கட்டண சலுகை தொடரும் என கூறப்படுகிறது.
அதேப்போல், தமிழக அரசு அறிவித்துள்ள பொது விடுமுறை நாட்களிலும் இந்த 50% கட்டண சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிறு முதல் இந்த சலுகை அமலுக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.
கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி இந்த சலுகை ஆனது ட்ரிப் பாஸ் உள்ளவர்கள் மற்றும் எண்ணற்ற பயண சலுகை அட்டை கொண்டவர்களுக்கு பொருந்தாது என்றும் கூறப்படுகிறது.