குமரி மாவட்டம் புதுக்கடை அருகே அஞ்சுகண்ணுகலுங்கு பகுதியில் மாடன்தம்புரான் இசக்கி அம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டு புனர்பிரதிஸ்டை மற்றும் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டார்.
அவருக்கு வரவேற்பு அளிக்க மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் உட்பட உயர் அதிகாரிகள் பலர் வந்திருந்தனர். மேலும் விழாவில் பங்கேற்க தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
இதன் காரணமாக கோவில் வளாகத்தில் மிகுந்த கூட்ட நெரிசலாக காணப்பட்டது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி சென்னையை சேர்ந்த ஒரு கும்பல் பக்தர்களிடம் இருந்து நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளது.
அப்போது ஒரு பெண்ணின் கழுத்தில் கிடந்த தாலி செயினை இழுத்து எடுத்தபோது அந்த பெண் சத்தம் போடவே கோவில் நிர்வாகத்தினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து புதுக்கடை போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும் படிக்க | இங்கிலாந்தில் வரலாறு படைக்குமா இந்தியா? பும்ராவுக்கு காத்திருக்கும் சவால்
தொடர்ந்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மூன்று பேரும் குமரவேல் 48, அவரது காதல் மனைவி குமாரி 40, மற்றும் மணிகண்டன் என்றும், அவர்கள் சென்னை கொளத்தூரை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் இதுபோன்ற கூட்டம் அதிகமாக கூடும் திருவிழாக்கள் போன்ற நிகழ்வுகளில் கூட்டத்தோடு கூட்டமாக புகுந்து நகை பணங்களை பறித்து செல்வதையே வாடிக்கையாக கொண்டிருந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கோவில் தலைவர் மோகன்தாஸ் கொடுத்த புகாரின்பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க | அடித்தது அதிர்ஷ்டம்! இந்திய அணிக்கு கேப்டனான தினேஷ் கார்த்திக்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR