Chennai: தனி மனித இடைவெளியை உறுதிசெய்ய 40 புறநகர் ரயில்கள் கூடுதலாக இயக்கப்படும்

புறநகர ரயில்கள் திருத்தணியிலிருந்து சென்னை எக்மோர் மற்றும் எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம் வரையும் இயங்கத் தொடங்கும். இது குறித்த அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அதிகாரி கூறினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 19, 2020, 01:29 PM IST
  • சிறப்பு ரயில் சேவைகளுக்கான ரயில்கள் 244 ஆக அதிகரிக்கப்படும்
  • புறநகர ரயில்கள் திருத்தணியிலிருந்து சென்னை எக்மோர் மற்றும் எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம் வரையும் இயங்கத் தொடங்கும்.
  • தொற்றின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
Chennai: தனி மனித இடைவெளியை உறுதிசெய்ய 40 புறநகர் ரயில்கள் கூடுதலாக இயக்கப்படும்  title=

சென்னை: தற்போதுள்ள 204 ரயில்களுடன் மேலும் 40 ரன்கள் சேர்க்கப்பட்டு, சிறப்பு ரயில் சேவைகளுக்கான ரயில்கள் 244 ஆக அதிகரிக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரியின் கூற்றுப்படி மக்கள் அதிக அளவில் புறநகர் ரயில்களில் (Suburban Trains) பயணிக்கத் தொடங்கியுள்ளதால், தனி மனித இடைவெளியை பின்பற்றுவது கடினமாகிக் கொண்டிருக்கின்றது. ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கலாம்.

நகரத்தில் 204 சிறப்பு ரயில்கள் தற்போது சேவையில் உள்ளன. இதில், மாநில, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய தொழில்களில் உள்ளவர்கள் பயணித்து வருகின்றனர்.

தற்போது இயக்கப்படப்போகும் கூடுதல் ரயில்களால், ரயிலைப் பிடிக்க மக்கள் விரைந்து செல்வதும், கூட்டமாக ரயிலில் பயணிப்பதும் வெகுவாக குறைக்கப்படும். ரயில்களின் எண்ணிக்கை அதிகரிகப்பட்டால், தனி மனித இடைவெளியை பின்பற்றுவதிலும் கவனம் செலுத்த முடியும்.

ALSO READ: அம்மா COVID-19 வீட்டு பராமரிப்பு கிட்: மக்களிடையே இன்னும் பிரபலமாகாதது ஏன்

இது தவிர, புறநகர ரயில்கள் திருத்தணியிலிருந்து சென்னை எக்மோர் மற்றும் எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம் வரையும் இயங்கத் தொடங்கும். இது குறித்த அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அதிகாரி கூறினார்.

அரசாங்க ஊழியர்களும் அத்தியாவசியப் பணிகளில் உள்ள ஊழியர்களும் மட்டுமே தற்போது புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். எனினும் அவர்களது எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. அவர்களும் தனி மனித இடைவெளியை (Social Distancing) கடைபிடிப்பதும் மற்ற வழிமுறைகளைப் பின்பற்றுவதும் மிகவும் முக்கியமாகும்.

தொற்றின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், மக்களும் தங்களால் ஆன அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கண்டிப்பாக எடுக்க வேண்டும். 

ALSO READ: தமிழகத்தில் கொரோனாவை வென்று வீழ்த்திய முதல் மாவட்டமானது பெரம்பலூர்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News