வீடியோ: அபிநந்தனை வரவேற்க சென்ற பெற்றோருக்கு விமானத்தில் கைதட்டி பாராட்டு

இந்திய விமானப்பை வீரர் அபிநந்தனை வரவேற்க சென்ற பெற்றோரை பாராட்டிய விமானிகள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 1, 2019, 02:55 PM IST
வீடியோ: அபிநந்தனை வரவேற்க சென்ற பெற்றோருக்கு விமானத்தில் கைதட்டி பாராட்டு title=

பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய துல்லிய தாக்குதலைத் தொடர்ந்து, எல்லையில் போர் பதற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தநிலையிலும் நேற்று எல்லையில் நுழைய மீண்டும் பாகிஸ்தான் போர் விமானங்கள் முயற்சித்தன. ஏற்கனவே பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானங்கள் இந்திய எல்லையில் நுலைந்ததால், அதனை துரத்தி சென்ற இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தியது.

அப்பொழுது ஏற்ப்பட்ட விபத்தில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானின் பிடியில் சிக்கிக்கொண்டார். அவரை மீட்கும் முயற்சியில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அபிநந்தனை பாதுகாப்பாக விடுவிக்க வேண்டும் என்று உலக நாடுகளும் வலியுறுத்தியதோடு, பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தனர். இதன்மூலம் பின்வாங்கிய பாகிஸ்தான், அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கிய, நமது விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை  நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று தெரிவித்தார். 

இந்தநிலையில், இன்று விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் நாடு திரும்புகிறார். அவரை வரவேற்க்க நாடு முழுவதும் உள்ள மக்கள் தயாராக உள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் வாகா எல்லையில் ஏராளமானோர் குவிந்துள்ளனர். மேலும் பாதுக்காப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. 

 

தன் மகனை வரவேற்க்க அபிநந்தனின் பெற்றோர் சென்னையில் இருந்து டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் சென்ற விமானத்தில் பயணிகள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி அபிநந்தனின் பெற்றோரை வரவேற்றனர். இன்று 3 மணி அளவில் அபிநந்தன் நாடு திரும்புவார் எனத் தெரிகிறது.

Trending News