மத்திய வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது..!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று தமிழகத்தின் 15 மாவட்டங்களில், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், கரூர், திண்டுக்கல்,தேனி, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை புறநகர் பகுதிகளில் இடியுடன் மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது.. திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக பெருங்களூர், வல்லத்தில் 13 Cm மழையும், கீழ்பென்னாத்தூரில் 11 Cm மழையும், தஞ்சாவூரில் 9 Cm மழையும் பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ALSO READ | இனி SBI அனைத்து வங்கி வசதிகளையும் வீட்டு வாசலில் வழங்கும்..!
மேலும், நாளை மத்திய வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு பெறக்கூடும். இதன் காரணமாக அக்டோபர் 19 தேதி மத்திய கிழக்கு வங்க கடல், அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும், அக்டோபர் 20 ஆம் தேதி மத்திய மேற்கு வங்க கடல், அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அக்டோபர் 21 ஆம் தேதி மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடபட்டுள்ளது.