சென்னை: 10 மற்றும் 12 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக, மாநில இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தமிழகத்தில் CBSE பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டைக் கோரியுள்ளது. பொதுத் தேர்வுகளுக்கு முன்னர் பாடத்திட்டங்களை முடிக்க பள்ளிகளை திறப்பது முக்கியமான ஒன்றாகும்.
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் (CISCE) பள்ளிகளும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதற்காக, CISCE பள்ளிகளுக்கான கல்வி அமர்வைத் தொடங்க மாநிலத்தின் ஏற்பாடுகள் குறித்து விசாரித்துள்ளன. தற்போது, தமிழ்நாட்டில் 600 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் மற்றும் 100 CISCE கல்வி நிறுவனங்கள் உள்ளன.
பல மாநிலங்கள் ஏற்கனவே வகுப்புகளைத் தொடங்கியுள்ளதால், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து CBSE அதிகாரிகள் ஏற்கனவே கல்வி அதிகாரிகளை அணுகியுள்ளதாக பள்ளி கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"வகுப்புகள் தொடங்குவது குறித்து அறிக்கை கோரி மாநில அரசுக்கு CISCE ஒரு சுற்றறிக்கை அனுப்பியது," என்று அவர் மேலும் கூறினார். CBSE மற்றும் CISCE பொதுத் தேர்வுகள் (Board Exams) இரண்டும் இந்தியா முழுவதும் உள்ள CBSE, CISCE பள்ளிகளில் பொதுவான முறையில் ஒரே நேரரத்தில் நடக்கும் தேர்வுகள் என்பதால், இது குறித்து அனைத்து மாநிலங்களின் நிலைபாட்டையும் அறிய CBSE மற்றும் CISCE ஆர்வமாக உள்ளது.
"இங்குள்ள அதிகாரிகள் தொற்றுநோயின் போக்கை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். மேலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு அரசு பள்ளிகளைத் (Government Schools) திறப்பது பற்றியும் பரிசீலிக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்டு சில நாட்களாவது வழக்கமான முறையில் வகுப்புகள் நடந்தால்தான் மாணவர்கள் பொதுத் தேர்வுகளை நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியும்." என்று அவர் மேலும் கூறினார்.
ALSO READ: 2021 ஆம் ஆண்டின் 10, 12, NEET, JEE தேர்வுகளை தள்ளிப்போடுமா CBSE?
சுகாதார அதிகாரிகளிடமிருந்து இதற்கு முழுமையான ஒப்புதல் கிடைக்காவிட்டால், பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு எந்த வித அவசரத்தையும் காட்ட தயாராக இல்லை என்று கூறிய அந்த அதிகாரி, "சுகாதார நிபுணர்களைத் தவிர, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடமிருந்தும் கருத்துக்கள் மீண்டும் சேகரிக்கப்படும்" என்றார்.
தமிழக நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலைப் பள்ளி மற்றும் CBSE பள்ளிகளின் பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் கூறுகையில், “அனைத்து நிறுவனங்களும் SOP-க்களை ஏற்கத் தயாராக உள்ளன. எனவே நிறுவனங்கள் செயல்படத் தொடங்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். குறிப்பாக பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும்” என்று இது குறித்து கருத்து தெரிவித்தார்.
ALSO READ: திருத்தப்படுகிறதா 2021 JEE Main, NEET syllabus: என்ன கூறுகிறது கல்வி அமைச்சகம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR