சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கு; ப.சிதம்பரம் வீட்டில் CBI சோதனை

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள  பா சிதம்பரம் வீட்டில்  சிபிஐ அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகிறார்கள் 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 9, 2022, 04:42 PM IST
சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கு; ப.சிதம்பரம் வீட்டில் CBI  சோதனை title=

காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், மத்திய நிதியமைச்சராக இருந்த போது, அவரது செல்வாக்கை பயன்படுத்தி, அவரது மகனும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக பல குற்றசாட்டுகள் உள்ளன. 

இது தொடர்பான வழக்குகளும் பல நிலுவையில் உள்ளது. இந்த நிலையில்,  சீன நாட்டை சேர்ந்த 263 பேருக்கு, சட்ட விரோதமாக  விசா பெற்று கொடுக்க  லஞ்சமாக் ரூ.50 லட்சம்  பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக CBI அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதுடன்,  இது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரான பாஸ்கர ராமனை CBI கைது செய்து விசாரணை மேற்கொண்டது.

இது தொடர்பான விசாரணையில் கடந்த மேம் மாத இறுதியில்,  டில்லி திரும்பிய கார்த்திக் சிதம்பரம்  சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். 

மேலும் படிக்க | சுற்றுப் பயணத்தில் கைகோர்க்கும் ஓபிஎஸ் - சசிகலா? தேனியில் முக்கிய முடிவு

இதை அடுத்து சீன நாட்டவர்களுக்கு முறைகேடாக விசா பெற்றுக் கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், டெல்லி நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  இதை அடுத்து மே 30 வரை கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி நீதிமன்றம்  தடை விதித்தது.

முன்னதாக, பஞ்சாப் மாநிலத்திலிருந்து  243 சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில், கடந்த மார்ச் 17ஆம் தேதி  கார்த்திக் சிதம்பரத்திற்கு சொந்தமான பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

அந்த சமயம் ப.சிதம்பரம் இங்கிலாந்தின் பா  இருந்ததால்  அவர் வீட்டில் உள்ள பல்வேறு அறைகள், பீரோ உள்ளிட்ட பல இடத்தில் சோதனை நடத்தப்படாமல் இருந்ததால்  மீண்டும் 7 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். 

இதில் விசா வழங்கியது தொடர்பாக ஏதேனும் ஆவணங்கள்  கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | பொதுக்குழு கூட்டம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது ; இபிஎஸ் - ஓபிஎஸ் இப்படி மோதிக்கொள்ள என்ன காரணம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News