கூடுவாஞ்சேரி GST சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது

கூடுவாஞ்சேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஆனது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 16, 2022, 06:14 PM IST
  • கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
  • தேசிய நெடுஞ்சாலையில் விபத்து
  • காரில் பயணித்த 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
கூடுவாஞ்சேரி GST சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது title=

சென்னை கொருக்குப்பேட்டை பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில் இவர் தனது காரில் தனது மனைவி மற்றும் மகள் ஆகியோருடன் தனது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்று இன்று சென்னைக்கு தனது குடும்பத்தாருடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னை மார்க்கமாகச் சென்று கொண்டிருக்கும் போது காரில் முன்பகுதியில் திடீரென கரும்புகை சூழ்ந்துள்ளது. 

மேலும் படிக்க | ‘இதனால்தான் கொலை செய்தோம்!’ - நாயைக் கொடூரமாக கொன்ற 3 பேர் கைது

இதனைக் கண்ட பாஸ்கர் காரை நிறுத்தி காரிலிருந்து வெளியே வந்து காரின் பேனட் திறக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கார் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது சிறிது நேரத்தில் அந்த தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த மறைமலை நகர் தீயணைப்பு துறையினர் தண்ணீர் பீச்சி அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். பாஸ்கர் கரும்புகை வருவதில் சுதாரித்து கொண்டதால் காரில் பயணித்த 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் இதன் காரணமாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க | சென்னையில் 30 நிமிட பயணம் இனி 4 நிமிடத்தில்..! தமிழக அரசின் சூப்பர் பிளான்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News