மதுரையை போதையில் மிதக்கவிட்ட 'கஞ்சா குடும்பம்' கைது - ரூ.5.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த கணவன் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டு ரூ.5.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டன.  

Written by - Gowtham Natarajan | Last Updated : Jun 29, 2022, 10:56 AM IST
  • கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த கணவன் மனைவி
  • ரூ.5.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்
  • கஞ்சா கடத்தல் கும்பலுக்கு காவல்துறை எச்சரிக்கை
மதுரையை போதையில் மிதக்கவிட்ட 'கஞ்சா குடும்பம்' கைது - ரூ.5.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் title=

தென்தமிழகத்தில் பரவலாக நடைபெற்று வந்த கஞ்சா மற்றும் போதை விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தென்மண்டல காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இக்குற்றச் சம்பவத்தில் ஈடுபடும் நபர்களது சொத்துக்களையும் முடக்குவதற்கான நடவடிக்கைகளும் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில் மதுரை ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலையடுத்து சம்பந்தப்பட்ட வீடுகள் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது வீட்டிற்குள் சட்டத்திற்குப் புறம்பாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 170 கிலோ கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக காளை மற்றும்‌ பெருமாயி என்ற கணவன் மனைவி இருவரை போலீசார் கைது செய்தனர். இருவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

Drugs,Cannabis,madurai,arrest,husbad wife,மதுரை மாவட்டம் ஒத்தக்கடை,கஞ்சா விற்பனை,கஞ்சா

போதை பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கஞ்சா விற்கும் தொழில் செய்து அதில் ஈட்டிய பணத்தையும், அதன் மூலம் வாங்கப்பட்ட சொத்துகளையும் அவரது உறவினர்கள் பெயரில் ஈட்டிய சொத்துக்களையும் பறிமுதல் செய்யலாம் என்ற சட்டத்தின் அடிப்படையில் சொத்து விபரங்கள் சேகரிக்க முடிவெடுத்தனர்.

அதனடிப்படையில் சொத்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களின் உறவினர்களின் வீடுகளிலும் சோதனை செய்யப்பட்டு, சொத்து விபரங்கள் கணக்கில் எடுக்கப்பட்டன. சுமார் 5 கோடியே 50 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டன.

Drugs,Cannabis,madurai,arrest,husbad wife,மதுரை மாவட்டம் ஒத்தக்கடை,கஞ்சா விற்பனை,கஞ்சா

இதனையடுத்து தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கர்க் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கஞ்சா தொழில் செய்வது சட்டப்படி குற்றம் மற்றும் கஞ்சா விற்பனை செய்வது சமூகத்தின் சீர்கேடாகும். மேற்படி கஞ்சா தொழில் செய்பவர்கள் மற்றும் அவர்கள் உறவினர்களின் சொத்துக்களை முற்றிலுமாக முடக்க கடுமையான நடவடிக்கை காவல்துறையின் மூலம் எடுக்கப்படும்.

மேலும் | CRIME : மகளை பழிதீர்க்க தாயை கடத்தி கொன்று புதைத்த கொடூரம்

கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர் மொத்த வியாபாரிகள் மற்றம் சில்லரை வியாபாரிகள் அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும், கஞ்சா வியாபாரிகள் மற்றும் கடத்துபவர்கள் மட்டுமல்லாது அவர்களின் உறவினர்களின் சொத்துக்கள் அனைத்தும் சட்டப்படி முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் | மனைவியை தம்புள்ஸால் அடித்துக் கொலை செய்த கணவன்.!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News