நீலகிரிக்கு சுற்றுலா சென்றவர்களை திருப்பி அனுப்பிய காவல்துறை - பாலத்தால் வந்த சோதனை

நீலகிரியில் தேசிய நெடுஞ்சாலை பாலம் இடிந்ததால் 16 மணி நேரம் மூன்று மாநில போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரிக்கு சுற்றுலா சென்ற சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 13, 2023, 08:06 PM IST
  • நீலகிரிக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள்
  • திடீரென இடிந்து விழுந்த பாலம்
  • பாதியில் திருப்பி அனுப்பிய காவல்துறை
நீலகிரிக்கு சுற்றுலா சென்றவர்களை திருப்பி அனுப்பிய காவல்துறை - பாலத்தால் வந்த சோதனை title=

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி என்பது தமிழக, கேரள, கர்நாடக எல்லைப் பகுதியாக உள்ளது. நாள்தோறும் கர்நாடகா மற்றும் கேரளாவிலிருந்து சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பிற பயணிகள் அதிக அளவில் கூடலூர் வழியாகவே உதகை போன்ற சுற்றுலா தளங்களுக்கு செல்கின்றனர். இந்த நிலையில் பல வருடங்களாக மக்களின் கோரிக்கையை அடுத்து ஆங்காங்கே மிகவும் பழுதடைந்துள்ள பாலங்களை இடித்து விட்டு அதன்  அருகாமையில் புதிய பாலங்களை அமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை எப்படி உள்ளது? சமீபத்திய தகவல்!

இந்த நிலையில் கூடலூரில் இருந்து உதகை செல்லும் சாலையில், கூடலூரில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேல் கூடலூர் பகுதியில் மிகவும் சேதமடைந்த பழைய பாலம் அருகே புதிய பாலம் கட்டுவதற்காக ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்தப் பாலம் கொஞ்சம் கொஞ்சமாக இடிந்தது. இதனை அடுத்து நெடுஞ்சாலை துறையினர், காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அந்தப் பாலத்தில் வாகனம் செல்லும் பட்சத்தில் மிகப்பெரிய ஆபத்து நேரும் என்பதால் மூன்று மாநில போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை பாலம் இடிந்த சூழ்நிலையில் இரவோடு இரவாக பாலத்தின் இடது புறம் தற்காலிக பாலம் என அமைக்க துரித பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை 16 மணி நேரமாக மூன்று மாநில போக்குவரத்து துண்டித்துள்ள சூழ்நிலையில், கர்நாடக கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். குறிப்பாக கூடலூர், பந்தலூர் பகுதியில் இருந்து உதகை போன்ற மருத்துவமனைக்கு செல்ல முடியாமலும் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர். 

தற்காலிக பாலம் அமைத்து வரும் நெடுஞ்சாலைத்துறை கூறுகையில், அந்த பாலம் முழுவதும் அமைக்கப்பட்டாலும் கனரக வாகனங்களை கொண்டு ஆய்வு செய்த பின்னரே போக்குவரத்து தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாலம் உடைந்தது தெரியாமல் இன்று வார விடுமுறை என்பதால் கேரளா கர்நாடகா பகுதியில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்த நிலையில் அவர்களை கூடலூரில் காவல்துறையினர் திருப்பி அனுப்பும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | செந்தில் பாலாஜியிடம் தீவிர விசாரணை: கரூரில் உள்ள சொகுசு பங்களா வீட்டில் மீண்டும் சோதனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News