கார்த்தி சிதம்பரம், நளினி சிதம்பரம் உள்ளிட்டோர் மீதான கருப்புப் பண தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Madras High Court quashes sanction orders issued by Income Tax officials for prosecution of former Union Minister P Chidambaram’s wife, son and daughter in law under the black money act pic.twitter.com/G6krnuztX8
— ANI (@ANI) November 2, 2018
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகிய 3 பேருக்கும் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் வீடுகள் உள்ளன. பல கோடி ரூபாய்க்கு வாங்கிய இந்த சொத்துக்களை, தங்களது வருமான வரிக்கணக்கில் அவர்கள் காட்டவில்லை என்று புகார் எழுந்தது.
இதையடுத்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்புப் பணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் நளினி சிதம்பரம் உள்பட 3 பேர் மீது வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்து, சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது. மேலும் கருப்புப் பண தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் வருமான வரித்துதுறை அனுமதி கேட்டிருந்தது.
இந்த வழக்கு குறித்த விசாரணை எழும்பூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் 3 பேரும் இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சென்னை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
ஏற்கனவே வழக்கை விசாரித்த கோர்ட், ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் இவ்வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட், வருமான வரித்துறை கருப்புப் பண தடுப்பு சட்டத்தின் மீதான நடவடிக்கையை ரத்து செய்துள்ளது.