H Raja Mobile Eavesdropping: 18ஆவது மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 102 தொகுதிகளில் கடந்த ஏப்.19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களின் 89 தொகுதிகளில் நாளை (ஏப். 26) நடைபெறுகிறது.
தொடர்ந்து, மே 6, மே 13, மே 20, மே 26, ஜூன் 1 ஆகிய தேதிகளில் முறையே அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறும். ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். கடந்த மார்ச் 16ஆம் தேதி தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. ஜூன் 6ஆம் தேதி வரையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடு முழுவதும் அமலில் இருக்கும். தேர்தல் நடந்த முடிந்த பகுதிகளில் சற்று தளர்வுகள் இருக்கும்.
பிரதமர் மோடியின் பேச்சு
அந்த வகையில், ராஜஸ்தானில் சமீபத்தில் பிரதமர் மோடி பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசியபோது இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இது நாடு முழுவதும் பரபரப்பை உண்டாக்கிய நிலையில், தேர்தல் ஆணையமும் பாஜகவுக்கு சம்மனை அனுப்பியிருக்கிறது. இதுகுறித்து பாஜக தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் சூழலில், தமிழ்நாட்டில் ஹெச்.ராஜாவும் இன்று கருத்து தெரிவித்தார்.
மேலும் படிக்க | வாக்காளர் பெயர் நீக்கம்... மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு வழங்க கோரிக்கை..!!
இந்நிலையில், சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மஹாலில் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ஹெச். ராஜா,"காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினை கவர்வதற்காக, பெரும்பான்மையினரை வஞ்சிக்கும் விதமாக, பிரித்தாளும் தனது தேர்தல் சித்து விளையாட்டை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.
இந்துக்களை பிரிக்க நினைக்கும் காங்கிரஸ்
ராஜஸ்தான் தேர்தல் பரப்புரையில் தேர்தல் விதிமுறையை பாஜக மீறவில்லை. அங்கு 90 நிமிடங்கள் பேசிய பிரதமர் முஸ்லிம் என்ற வார்த்தையை ஒரு முறை கூட பேசவில்லை. தேர்தல் ஆணையத்திடம் பிரதமருக்கு எதிராக மனு அளித்தாலும், மத ரீதியாக பிரதமர் பேசாததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை.
மதத்தின் அடிப்படையில் சிறுபான்மையினரை இணைக்கவும், ஜாதி அடிப்படையில் இந்துக்களை பிரித்து ஆட்சிக்கு வர காங்கிரஸ் முயற்சிக்கிறது. செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மை உள்ளது. 20 நாட்களாக எனது செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகிறது. அதனால் செல்போனில் அதிகம் உரையாடுவது கிடையாது.
ஜூன் 4ம் தேதிக்கு பின் கைது!
டெல்லியில் இருந்து ஹைதராபாத் வரை வந்த சாராய ஊழல் வழக்கு சென்னைக்கும் விரைவில் வரும். சாராயம் உற்பத்தி செய்யும் அனைவரும் ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு சிறை செல்வார்கள். அதில் முதலமைச்சரா? அமைச்சரா? இருக்கின்றார்களா என்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை. மணல் குவாரி வழக்கில் அமலாக்கத்துறையில் ஆஜரான ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பல தகவல் தெரியும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படியே ஐஏஎஸ் அதிகாரிகள் ஆஜராகி உள்ளனர்" என்றார்.
மேலும் படிக்க | வருமானத்துக்கு அதிகமாக ரூ.20 லட்சம் சொத்து... பஞ்சாயத்து கிளர்க் வீட்டில் ரெய்டு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ