விபத்து ஏற்படுத்திவிட்டு எஸ்கேப் ஆன பிக்பாஸ் நடிகையின் கணவர்!

நடிகை ஆர்த்தியின் கணவர் கணேஷ் விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமைறைவாக உள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 7, 2022, 07:16 PM IST
  • ஆர்த்தியின் கணவர் கணேஷ் கார் விபத்தில் சிக்கினார்.
  • பின்னால் வந்தவருக்கு பலத்த காயம்.
  • தற்போது அரசு மருத்துவனையில் அனுமதி.
விபத்து ஏற்படுத்திவிட்டு எஸ்கேப் ஆன பிக்பாஸ் நடிகையின் கணவர்! title=

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ஆர்த்தி. இவரது கணவர் கணேஷ்கரும் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நேற்று விபத்தை ஏற்படுத்தி விட்டு தலைமறைவாகி உள்ளதால் அவரை சென்னை அடையாறு போக்குவரத்து காவல்துறையினர் தேடி வருவதாக கூறப்படுகிறது.  நடிகர் கணேஷ்கர் நேற்றிரவு பட்டினப்பாக்கம் சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதிய உள்ளது.  

aarthi

மேலும் படிக்க | விக்ரமுடன் மோதும் விக்ரம்?

கார் வந்த வேகத்தில் முட்டி ரெவெர்ஸில் சென்றதால், காரின் பின்னால் வந்த இரு சக்கர வாகனம் ஒன்று மோதியதாக தெரிகிறது. மோதிய இருசக்கர வாகன ஓட்டியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து அவரை மீட்டு, அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் கூட்டம் சேரவே கணேஷ் காரை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டதாகவும் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கணேஷ் மனைவி ஆர்த்தி தனது கணவர் வீட்டிற்கு வரவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் விடிய விடிய ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் போலீசார் அவரை தேடியுள்ளனர்.  

aarthi

கணேஷ்கரின் வீட்டிற்கு சென்று  போலீசார் நடத்திய விசாரணையில் கணேஷ்கர் தேனாம்பேட்டையில் உள்ளதாக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்  அங்கு சென்று தேடிய போலீசார் அப்படி யாரும் அங்கு  இல்லை என தெரியவந்ததை அடுத்து  இந்த விபத்து சம்பந்தமாக அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்து நடந்த போது நடிகர் கணேஷ்கர் குடித்து விட்டு வாகனம் ஓட்டினாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நகைச்சுவை நடிகையின் கணவர் திடீரென விபத்தை ஏற்படுத்திவிட்டு போலீசில் இருந்து தப்பிக்க தலைமறைவாகி உள்ளதாக  வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | சிம்பு - நெல்சன் கூட்டணியில் புத்துயிர் பெறும் பழைய படம்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News