Salem Lord Murugan Statue Latest Update News: சேலத்தில் புதிதாக 56 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட முருகன் சிலையின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இந்நிலையில் முகம் மாறிய முருகன் சிலையால் பக்தர்கள் கடும் கோபத்துக்கு ஆளாகினர். மேலும் இச்சிலையை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் அந்த சிலை உடனடியாக மூடப்பட்டு புனரமைக்கும் பணி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ராஜமுருகன் கோவிலில் பிரமாண்டமான முருகன் சிலை அமைக்க கோயில் நிறுவன தலைவர் வெங்கடாசலம் முடிவு செய்தார். இதற்கான பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்றது. இதை தொடர்ந்து, இக்கோயிலுக்கான 56 அடி உயர முருகன் சிலையை சிற்பியும் வடிவமைக்க தொடங்கினார். கடந்த சில நாட்களுக்கு முன் முருகன் சிலை வடிவமைக்கும் பணி முழுவதுமாக முடிவடைந்தது.
பக்தர் அதிருப்தி
அப்போதுதான் கோவில் நிர்வாகத்திற்கும் மற்றும் பக்தகோடிகளுக்கும் ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது முருகனின் முகம் என்பது முற்றிலும் மாறுபட்டு இருந்தது. வழக்கமாக கோயில்களில் இருக்கும் முருகனை போல் இந்த முருகன் சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்படவில்லை என பேச்சுக்கள் வந்தன. இதனால் பக்தர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலாக செங்கோட்டையன்? திமுக அமைச்சர் சொன்ன தகவல்!
இந்நிலையில் இதுதொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகின. இது மேலும் மேலும் முருகப் பக்தர்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தின. பல்வேறு தரப்பிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இதுவரை 40 லட்சம் செலவு
இதனையடுத்து கோவில் நிர்வாகம் மற்றும் சிலை வடிவமைத்த சிற்பியை பக்தகோடிகள் பலரும் விமர்சனம் செய்ய தொடங்கினர். இதனை தொடர்ந்து, தற்போது இந்த சிலை துணி போட்டு மூடப்பட்டுள்ளது. மேலும் முருகன் சிலையை புனரமைக்க வேண்டும் என பக்தர்களும், நெட்டிசன்களும் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற கோயில் நிர்வாகம் சிலைக்கு மறுவடிவமைப்பு கொடுக்கும் பணியை தொடங்கவுள்ளது.
முகம் மாறிய முருகன் சிலைக்கு இதுவரை 40 லட்சம் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் முனிஸ்வரன் சிலையை வடிவமைத்த அனுபவம் மட்டுமே உள்ள சிற்பிக்கு முருகன் சிலை முறையாக வடிவமைக்க இயலாமல் முகம் மாற காரணமாகிவிட்டதாம். இந்நிலையில்தான் பக்தர்கள் உட்பட பல்வேறு தரப்பின் விமர்சனங்களுக்குப்பின் முகம் மாறிய முருகன் சிலை மீண்டும் புனரமைப்பு செய்யப்படும் என கோவில் நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், முருகன் சிலையை வடிவமைத்த சிற்பியை கடுஞ்சொற்களால் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது என இணையத்தில் நெட்டிசன்கள் சிலரும் பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | "சேடிஸ்ட் முதல்வர் ஸ்டாலின்" அதிமுகவின் ஜெயக்குமார் கடும் விமர்சனம்! ஏன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ