கொடநாடு கொலை வழக்கு... 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' - இபிஎஸ் ஆஜராக உத்தரவு

Edappadi Palanisamy: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுறுத்தல் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Dec 15, 2023, 01:32 PM IST
  • 2019இல் இபிஎஸ் இந்த மான நஷ்ட வழக்கை தொடர்ந்தார்
  • மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது - இபிஎஸ் தரப்பு
  • சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பான பாதுகாப்புகளை வழங்கி வருகிறது - நீதிபதிகள்
கொடநாடு கொலை வழக்கு... 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' - இபிஎஸ் ஆஜராக உத்தரவு title=

Tamilnadu Latest News: கொடநாடு கொலை கொள்ளை (Kodanad Murder Robbery Case) வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019ஆம் ஆண்டு தற்போது அதிமுக பொது செயலாளராகவும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ள எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி எட்பபாடி பழனிசாமி (Edappadi Palanisamy) சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மேலும் படிக்க | சென்னையில் வெள்ள நிவாரணம் வழங்கிய உதயநிதி!

இந்த மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்தோடு, இந்த நடைமுறையை அவரது வீட்டில் மேற்கொள்வதற்காக வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்தது.  

இந்த உத்தரவை எதிர்த்து சாமுவேல் மேத்யூ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் 

அப்போது, மாஸ்டர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என கூறக்கூடிய காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என தெரிவித்த நீதிபதிகள், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என ஏற்கனவே கூறியதை மீண்டும் நினைவுப்படுத்துவதாக கூறினர். 

மேலும், சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) சிறப்பான பாதுகாப்புகளை வழங்கி வருவதால், எடப்பாடி பழனிசாமி மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக அறிவுறுத்தல் வழங்க அவர் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

சமீபத்தில், கொடநாடு வழக்கில் தொடர்புடைய ஓட்டுநர் கனகராஜின் மூத்த சகோதரர் தனபால் சேலத்தில் ஊடகங்களை சந்தித்தார். அப்போது அவர்,"சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்க தன்னிடம் பேரம் பேசப்பட்டது. 2000 கோடி ரூபாய் வரை தருவதாக அதிமுக பிரமுகர் ஒருவர் தனக்கு வீட்டுக்கு வந்து பேசினார்.

கொடநாடு கொலை கொள்ளை சம்பவங்கள் குறித்த உண்மைகள் தமிழக மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக தான் போராடி வருகிறேன்" என்றும் அவர் தெரிவித்தார். இதில் அவர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | நிர்மலா சீதாராமனுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News