தேர்தலுக்கு ரெடியாகும் திமுக... 3 குழுக்கள் அமைப்பு - யார் யாருக்கு என்ன பொறுப்பு?

Lok Sabha Election 2024: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக மூன்று பணிக்குழுக்களை இன்று அறிவித்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள முக்கிய புள்ளிகளை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 19, 2024, 06:24 PM IST
  • தேர்தல் அறிக்கையை தயார் செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், பார்வையிடவும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு ரெடியாகும் திமுக... 3 குழுக்கள் அமைப்பு - யார் யாருக்கு என்ன பொறுப்பு? title=

Lok Sabha Election 2024: வரும் மக்களவை தேர்தலுக்காக மூன்று பணிக்குழுக்களை திமுக (DMK) இன்று அறிவித்துள்ளது. குறிப்பாக, நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவை திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் (CM MK Stalin) அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவையும், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திடும் குழுவையும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

இதில், ஒருங்கிணைப்பு குழு என்பது நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்சி பணிகளை ஒருங்கிணைக்கவும், பார்வையிடவும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் நான்கு அமைச்சர்கள் உள்பட ஐந்து பேர் இடம்பெற்றுள்ளனர். அமைச்சர் கே.என். நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அமைச்சர் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

இதை தொடர்ந்து, தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவின் தலைவராக திமுக பொருளாளரும், மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், குழு உறுப்பினர்களாக  திமுக முதன்மை செயலாளர் கே.என். நேரு, துணைப் பொதுச்செயலாளர் இ. பெரியசாமி, துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க | திமுகவுக்கு செக் வைக்க அண்ணாமலை எடுத்த ஆயுதம்..! 3 வாரத்தில் ரிலீஸாகும் 2ஜி ஆடியோ....

முக்கியமாக, நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழுவுக்கு துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவின் உறுப்பினர்களாக திமுக செய்தி தொடர்புத் தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ் விஜயன், சொத்து பாதுகாப்புக் குழுச் செயலாளர் பி.டிஆர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டி.ஆர்.ராஜா, வர்த்தகர் அணி துணை செயலாளர் கோவி. செழியன், கே.ஆர்.என். ராஜேஸ்குமார் எம்.பி., மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிரசன், அயலக அணி செயலாளர் எம்.எம். அப்துல்லா, மருத்துவ அணி செயலாளர் எழிலன் நாகநாதன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா, தளம், ஆம் ஆத்மி கட்சி என 28 கட்சிகள் இணைந்து I.N.D.I.A என்று அழைக்கப்படும் கூட்டணியை உருவாக்கி உள்ளன. பாஜகவை வீழ்த்தும் ஒற்றை குறிக்கோளுடன் இந்த கட்சிகள் கைக்கோர்த்து வரும் மக்களவை தேர்தலை சந்திக்கின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆளும் திமுக அரசு இந்த கூட்டணியில் இருப்பதால், காங்கிரஸ் கட்சியும் இதில் அதிக தொகுதிகளை பெற முயற்சிக்கும். 

கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 10 தொகுதிகளை பெற்றிருந்த நிலையில், இந்த முறை தொகுதிகள் குறையுமா அல்லது அதிகரிக்குமா என தேர்தல் வல்லுநர்கள் உற்றுநோக்கி வருகின்றனர். மாநிலத்தில் தனது ஆதிக்கத்தை தொடர திமுக தன்வசம் உள்ள தொகுதிகளை அதிகரிக்க நினைக்கும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.  

மேலும் படிக்க | பிரதமர் மோடி வருகை 3 நகரங்களில் இதை செய்யக்கூடாது...! அதிரடி உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News