Tamilaga Vetri Kazhagam Latest News: தமிழ்நாடு அரசியல் களத்தில் நடிகர்களோ அல்லது சினிமா பிரபலங்களோ கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்திப்பது என்பது புதிதல்ல. சுதந்திரத்திற்கு தமிழ்நாடு பல முதலமைச்சர்களை பெற்றிருந்தாலும், ஆரம்ப காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியே இங்கு கோலோச்சி வந்தது. அப்போது, அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் என்ற அப்போதைய இளைஞர்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு சித்தாந்த ரீதியான மற்றும் திராவிடர் கழக்கத்தின் நீட்சியான அந்த கட்சி 1967இல் ஆட்சியை கைப்பற்றியது.
அண்ணா முதல்வராக இருந்து 1969இல் மறைந்த பின்னர், 7 நாள்கள் நெடுஞ்செழியன் பொறுப்பு முதல்வராக இருந்தார். அதன்பின், மறைந்த மு. கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்று 1971 சட்டப்பேரவை தேர்தலையும் வென்று சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்தார். இவருக்கும் அண்ணாவுக்கும் எழுத்து சார்ந்து சினிமா தொடர்பு இருந்தது எனலாம்.
சினிமாவும் அரசியலும்...
அதன்பின், திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை (பின் நாட்களில் அஇஅதிமுக) தொடங்கினார் மறைந்த நடிகர் எம்ஜிஆர். அவர் சுமார் 10 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்தார். இடையில் 112 நாள்கள் ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி நடைபெற்றது. முன்னதாக கருணாநிதியின் ஆட்சியும் கலைக்கப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகள் அதாவது எமர்ஜென்சி காலகட்டத்தில் தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சிதான் நடைபெற்றது.
நடிகர் எம்ஜிஆரின் அரசியல் வாரிசாக வளர்ந்தார் மறைந்த நடிகை ஜெயலலிதா. எம்ஜிஆர் மனைவி ஜானகியையும் தோற்கடித்து ஜெயலலிதா அதிமுகவின் பொதுச்செயலாளராக உயர்ந்து தமிழ்நாடு முதல்வராகவும் 5 முறை பொறுப்பேற்றார். இப்படி, அண்ணா தொடங்கி ஜெயலலிதா வரை சினிமாவின் தாக்கம் அரசியலிலும் பிரதிபலித்தது.
தமிழக வெற்றிக் கழகம்
விஜயகாந்தின் எழுச்சி திமுக, அதிமுக என இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்று என உரையாடலை அழுத்தமாக்கியது. ரஜினியின் அரசியல் வருகைக்கான கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். கமல் கட்சியை ஆரம்பித்து தனது முதல் வெற்றிக்காக இன்னும் காத்திருக்கிறார். முன்னணி நடிகர்கள் முதல் சரத்குமார், கருணாஸ், விஷால் என பலரும் தனித்தனியாக கட்சி ஆரம்பித்து தனது செல்வாக்கை நிரூபிக்க பல தேர்தல்களை சந்தித்தனர்.
அந்த வகையில், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய், தனது விஜய் மக்கள் இயக்கத்தை, தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vetri Kazhagam) என்ற பெயரில் மாற்றி இம்மாத தொடக்கத்தில் அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்திடம் டெல்லியில் பதிவு செய்தார். தொடர்ந்து அக்கட்சியின் தலைவராகவும் நடிகர் விஜய் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
மதுரையில் மாநாடா...?
தொடர்ந்து, 2 கோடி கட்சிக்கு உறுப்பினர் என்ற இலக்கையும், நிர்வாகிகளை தேர்வு செய்யவும் மும்முரமாக பணியில் அக்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 2026 சட்டப்பேரவை தேர்தலில்தான் தனது கட்சி போட்டியிடும் என்றும் வரும் 2024 மக்களவை தேர்தலில் போட்டியும் இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என நடிகர் விஜய் தனது அறிக்கையின் வாயிலாக முன்னர் தெரிவித்திருந்தார். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு மதுரையில் விரைவில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வந்தன.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட X பதிவில் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பதிவில்,"நம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான், கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை, பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிட்ட தமது முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தியுள்ளார்.
'யாரும் நம்ப வேண்டாம்'
தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வச் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும், உறுப்பினர்கள் சேர்க்கைக்காகச் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் கடந்த 19ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளேன்.
கட்சியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தவிர்த்து, யூகத்தின் அடிப்படையில் அல்லது விஷமத்தனமாகப் பரப்பப்படும் செய்திகளைக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 100 மாவட்டங்களாகப் பிரித்துப் பொறுப்புகள்: நடிகர் விஜய் முடிவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ