Chennai Crime News Latest Updates: சென்னை தேனாம்பேட்டை ரத்னா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மனைவி பானுமதி. மூத்த குடிமக்களான இவர்கள் சென்னை அடையாறில் உள்ள எஸ் பேங்க் என்ற தனியார் வங்கியில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் வங்கி கணக்கு பராமரித்து வந்துள்ளனர்.
இதையடுத்து அந்த மேலாளராக பணிபுரிந்த பேட்ரிக் ஹோப்மேனை அணுகி தங்களது வங்கியில் வைப்புத் தொகையில் டெபாசிட் செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி ராஜேந்திரன் பானுமதி தம்பதியினர் தங்களிடமிருந்த 7.5 கோடி ரூபாய் பணத்தை வங்கியில் கடந்த 2021ஆம் ஆண்டு டெபாசிட் செய்துள்ளனர். அதன்பிறகு ராஜேந்திரன் பானுமதி தம்பதியினர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர்.
7.5 கோடியை சுருட்டிய மேலாளர்
இதனை பயன்படுத்தி ராஜேந்திரனின் செக்கை போலியாக கையெழுத்து போட்டு வைப்புத் தொகையில் இருந்த 7.5 கோடி ரூபாய் பணத்தை எடுத்து மேலாளரின் நண்பர்களுக்கு உறவினர்களுக்கு அந்த பணத்தை டெபாசிட் செய்துள்ளார்.
மேலும் படிக்க | மனதளவில் பாதிப்பு... வாழ்வதா? சாவதா? - பெண் போலீஸ் உருக்கம்!
இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராஜேந்திரன் - பானுமதி தம்பதியினர் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு மேற்கொண்டனர். போலீசார் விசாரணை நடத்தியதில் பேட்ரிக் ஹுக் மேன் பணத்தை கையாடல் செய்துவிட்டு லண்டனுக்கு தப்பி சென்றுள்ளதும் தெரியவந்தது.
சென்னை கமிஷனர் பாராட்டு
இதனை அடுத்து இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக பேட்ரிக் ஹுக் மேனின் நண்பர் ராபர்ட் என்பவர் வங்கி கணக்குக்கு மூன்று கோடியே 70 லட்சம் அனுப்பியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ராபர்ட் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் ராபர்ட் ஒரு முன்னணி கட்சியின் நிர்வாகியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இதனை யாரும் உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் மோசடி கும்பலை கைது செய்த வங்கி மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ஜாலி செல்லப்பா, உதவி ஆய்வாளர் ராகவி, சுமதி வெங்கடேசன் ஆகியோரை சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் பாராட்டினார்.
மற்றொரு திருட்டு சம்பவம்
முன்னதாக, சென்னையில் கோவிலில் நடந்த நகைத்திருட்டு தொடர்பான குற்றவாளியையும் சென்னை காவல்துறை கையும் களவுமாக பிடித்தது. அதன் பின்னணியையும் இதில் காணலாம். சென்னை தி.நகர் ராகவய்யா சாலையில் பிரசித்தி பெற்ற ஹயக்ரீவர் கோயிலில் உதவியாளராக கடந்த மாதம் பணியில் சேர்ந்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தினகர் திரிபாதி என்பவர் 20 சவரன் தங்க ஆபரணங்களை திருடிக்கொண்டு தலைமறைவானார்.
மேலும் படிக்க | திமுகவுக்கு அடுத்த சிக்கல்! பூதாகரமாகும் யானை தந்தம் கடத்தல் வழக்கு - பின்னணி!
அதவும் தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப். 19ஆம் தேதி கோயிலில் கூட்டம் இல்லாததால் அன்று தனது கைவரிசையை காண்பித்துள்ளார். மேலும், ஏப். 14ஆம் தேதிதான் அந்த பணிக்கும் அவர் சேர்ந்துள்ளார். மறுநாள் (ஏப். 20) காலை கோவிலுக்கு வந்த பூசாரி சாமி கழுத்தில் இருந்த தங்க நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். பின்னர் கோவில் மேலாளர் மதுசூதனன் தொடர்பாக பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் கோவிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
பகீர் பின்னணி?
அதில் புதிதாக பணிக்கு சேர்ந்த தினகர் திரிபாதி கோவிலில் உள்ள நகைகளை எடுத்துச் செல்வது பதிவாகி இருந்தது. இதனை அடுத்து போலீஸார் தலைமறைவான திரிபாதியை தீவிரமாக தேடினர். இந்நிலையில் நேற்று திரிபாதி தி.நகரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் அங்கு விரைந்து சென்று திரிபாதியை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திரிபாதி திருடிய நகைகளை 6 லட்சம் ரூபாய்க்கு விற்று விட்டு சொந்த ஊர் சென்று நண்பர்களுடன் குடியும் கும்மாளமுமாக இருந்தது தெரியவந்தது. மேலும் சொந்த ஊரில் இருந்தால் பணம் அனைத்தையும் நண்பர்கள் காலி செய்து விடுவார்கள், என நினைத்து தினகர் திரிபாதி கடந்த வாரம் சென்னை திரும்பியுள்ளார்.
பின்னர் தன்னிடம் உள்ள நான்கரை லட்சத்தில் சுய தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் சென்னையில் வாடகைக்கு கடை பார்த்து வந்துள்ளார். அப்போது வெளியே சுற்றி திரியும் போது போலீஸில் சிக்கியது தெரியவந்தது. பின்னர் போலீஸார் அவரிடம் இருந்த நான்கரை லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ