சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் வெறி தினேஷ்(25). ஆட்டோ டிரைவர். இவரை நேற்று இரவு 9.30 மணியளவில் 2 பேர் பட்டக்கத்தியுடன் ஒட ஒட விரட்டி சென்றுள்ளனர். அப்போது கிண்டி வண்டிக்காரன் தெருவில் உள்ள மளிகை கடையில் அவர்களிடம் இருந்து தப்பிக்க தினேஷ் புகுந்துள்ளார். உடனே 2 பேரும் கடைக்குள் புகுந்ததுடன், அங்கிருந்தவர்களையும் கத்தியைக் காட்டி மிரட்டி வெளியே அனுப்பியுள்ளனர். கடை உரிமையாளரும் கடையின் ஷ்ட்டரை மூடி பூட்டிவிட்டு சென்றதுடன், உடனே கிண்டி போலீசாருக்கு இது குறித்து தகவல் கொடுத்துள்ளார்.
கிண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது கடைக்குள் இருந்த 2 பேர் தினேஷை சராமரியாக வெட்டியது தெரியவந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் திணேஷ் பிணமாக கிடந்தார். இந்தக் கொலையில் தொடர்புடைய ஆதம்பாக்கத்தை சேர்ந்த சீசி மணிவண்ணன், பள்ளிக்கரணை ஊசி உதய் ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும், கொலை செய்யப்பட்ட திணேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு தென் சென்னை இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி, துணை கமிஷனர்கள் மகேந்திரன், தீபக் சுவாஜ், உதவி கமிஷனர்கள் ரூபன், சிவா ஆகியோர் பார்வையிட்டனர்.
மேலும் படிக்க | சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்: அண்ணாமலை எச்சரிக்கை
இது பற்றி கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் ஆதம்பாக்கத்தில் உள்ள ரவுடி ராபின் என்பவருக்கு நெருக்கமானவர் ஆட்டோ டிரைவர் வெறி தினேஷ் என்பது என தெரியவந்தது. ராபின் சிறையில் இருக்கிறார். இவனது கூட்டாளியான குணா பிரிந்து வெளியே உள்ளான். இதனால் ஆதம்பாக்கம் தாதாவாக வலம் வர குணா விரும்பியதாகவும், இதுபற்றி அவனது நண்பன் கமலேஷ் என்பவரிடம் கூறி உள்ளான். இதை அறிந்த தினேஷ் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக குணாவிடமும் செல்போனில் தினேஷ் பேசி இருக்கிறார். மேலும், ஒத்தைக்கு ஒத்தை சண்டை போட வா என கூறியதுடன், தான் இருக்கும் பகுதியை வாட்ஸ் ஆப்பில் அனுப்பி இருக்கிறார் தினேஷ். ஆனால் குணா அங்கு வராமல் அவனது கூட்டாளிகளான மணி, உதய் ஆகியோரை அனுப்பி வைத்துள்ளார். அப்போது, வேளச்சேரியில் இருந்த தினேஷை ஆட்டோவில் இருவரும் விரட்டி வந்துள்ளனர். கூட்டமாக இருப்பதை பார்த்ததும் தினேஷ் கடைக்குள் சென்று உள்ளார். இருப்பினும் அவர்கள் விடாமல் என்று கொலையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. இந்த கொலையில் சம்பந்தப்பட்டுள்ள குணாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கொலையில் இப்போது கைதாகியிருக்கும் இருவரும் 5 மணி நேரத்துக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்ததும் விசாரணையில் காவல்துறையினர் கண்டுபிடித்திருக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ