7th Pay Commission: 2025 ஆண்டு தொடக்கத்திலேயே மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் அதிரடியாக உயரவுள்ளது. இதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு கூடுதல் தொகையும் கிடைக்க வாய்ப்புள்ளது.
7th Pay Commission: பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டிற்காக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சில முக்கிய செய்திகள் கிடைக்கக்கூடும் என்று நம்பப்படுகின்றது. பட்ஜெட்டில் 8வது ஊதியக்குழு பற்றிய தகவல் கிடைக்கும் என மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஆனால், புதிய ஊதியக்குழுவிற்கு பதிலாக தனியார் துறையில் உள்ளது போல, வருடா வருடம் ஊதிய திருத்தம் செய்யப்படும் என்று கூறப்படுகின்றது. செயல்திறன் சார்ந்த சம்பள உயர்வு, அதாவது Performance Based Pay System என்று அழைக்கப்படும் புதிய முறையில், ஊழியர்களின் செயல்திறன் மற்றும் பணவீக்கத்தின் அடிப்படையில் ஊழியர்களின் சம்பளம் தீர்மானிக்கபப்படலாம்.
2025 ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அமோகமாக தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர்களது ஊதியம் அதிரடியாக உயரவுள்ளது. இதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு கூடுதல் தொகையும் கிடைக்க வாய்ப்புள்ளது. இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
7வது உதியக் குழு: ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய செய்தி கூடிய விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 2024 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது நவம்பர் எண்களும் வந்துள்ளன. இன்னும் டிசம்பர் மாதத்திற்கான எண்கள் வரவேண்டியுள்ளது. அதன் பின்னர் ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி உயர்வு பற்றிய இறுதி முடிவு எடுக்கப்படும்.
எனினும், ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் போக்குகளை கொண்டு பார்க்கும் போது, ஜனவரியில் 3% டிஏ உயர்வு இருக்கும் என தெரிகிறது. டிஏ 3% அதிகரித்தால், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை 56% ஆக அதிகரிக்கும்.
AICPI (அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு) அடிப்படையில் அகவிலைப்படி தீர்மானிக்கப்படுகிறது. இந்தக் குறியீடு ஒவ்வொரு மாதமும் வெளியிடப்பட்டு, 6 மாதங்களுக்கு (ஜூலை-டிசம்பர்) சராசரியாக அகவிலைப்படி அதிகரிக்கப்படுகிறது. இதுவரையிலான தரவுகள்: செப்டம்பர் 2024: 143.3 புள்ளிகள்; அக்டோபர் 2024: 144.5 புள்ளிகள், நவம்பர் 2024: 144.5 புள்ளிகள்
சம்பள உயர்வு: அகவிலைப்படி 3% அதிகரித்தால், ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும் என இங்கே காணலாம். அடிப்படை ஊதியம் ரூ.18,000 உள்ள ஊழியர்களுக்கு, 53% -இல் கிடைக்கும் அகவிலைப்படி, 53% டிஏ=ரூ.9,540. 56% -இல் கிடைக்கும் டிஏ=ரூ.10,080. அகவிலைப்படி ஏற்றம்=மாதம் ரூ.540. அடிப்படை ஊதியம் ரூ.56,000 உள்ள ஊழியர்களுக்கு, 53% -இல் கிடைக்கும் அகவிலைப்படி, 53% டிஏ=ரூ.29,733. 56% -இல் கிடைக்கும் டிஏ=ரூ.31,416. அகவிலைப்படி ஏற்றம்=மாதம் ரூ.1,683.
மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு தற்போதைய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 ஆக உள்ளது. அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000 ஆகும். அகவிலை நிவாரணம் 3% உயர்ந்தால், இவை முறையே மாதம் ரூ.270 மற்றும் ரூ.3,750 அதிகரிக்கும்.
பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டிற்காக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சில முக்கிய செய்திகள் கிடைக்கக்கூடும் என்று நம்பப்படுகின்றது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) கொரோனா காலத்தில் உருவான அசாதரண சூழலால் அகவிலைப்படி முடக்கப்பட்டது. அப்போது முடக்கப்பட்ட 18 மாத டிஏ அரியர் தொகையை வழங்குமாறு நீண்ட நாட்களாக கோரிக்கை உள்ளது. பட்ஜெட்டில் 18 மாத டிஏ அரியர் தொகை பற்றிய அறிவிப்பு கிடைக்கலாம் என நம்பப்படுகின்றது.
டிஏ அரியர் தொகை மூலம் கிடைக்கும் தொகை ஊழியர்களின் சம்பளம் மற்றும் தர ஊதியத்தைப் பொறுத்து இருக்கும். லெவல் 1 பணியாளர்களுக்கு தோராயமாக ரூ.11,800 முதல் அதிகபட்சமாக ரூ.37,554 வரை கிடைக்கக்கூடும். லெவல் 13 பணியாளர்களுக்கு ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை கிடைக்கும்.
பட்ஜெட்டில் 8வது ஊதியக் குழு பற்றிய தகவல் கிடைக்கும் என மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஆனால், புதிய ஊதியக்குழுவிற்கு பதிலாக தனியார் துறையில் உள்ளது போல, வருடா வருடம் ஊதிய திருத்தம் செய்யப்படும் என்று கூறப்படுகின்றது. செயல்திறன் சார்ந்த சம்பள உயர்வு, அதாவது Performance Based Pay System என்று அழைக்கப்படும் புதிய முறையில், ஊழியர்களின் செயல்திறன் மற்றும் பணவீக்கத்தின் அடிப்படையில் ஊழியர்களின் சம்பளம் தீர்மானிக்கபப்படலாம்.
அய்க்ரியோட் ஃபார்முலாவை ஊதிய உயர்வு கணக்கீட்டிற்கு பயன்படுத்துவது பற்றி அரசு ஆலோசித்து வருவதாக ஒரு சாரார் கூறுகின்றனர். இந்த புதிய ஃபார்முலா ஊழியர்களுக்கு பெரிய அளவில் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படி மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும் என நம்பபடுகின்றது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அகவிலைப்படி அரியர் தொகைக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.