இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபிடி காரணமாக விரைந்து விசாரிக்க தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று நடத்திய மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. காரணம், இந்நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட சில குளறுபிடிகளால் பல ஆயிரம் பேர் நேற்று தவித்துள்ளனர். இது குறித்து விசாரிக்க தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி:
ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கச்சேரி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யா ராம் பாலஸில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக பல்லாயிறக்கணக்கானோர் திரண்டனர். இந்நிகழ்ச்சிக்காக வெள்ளி, தங்கள், வைரம், பிளாட்டினம் என்ற வகைகளில் ரூபாய் 2,000 முதல் ரூபாய்.15,000 வரை டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. ரத்து செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சிக்காக வாங்கிய டிக்கெட்டுகளையே இந்த நிகழ்ச்சியில் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த டிக்கெட்டுகளுடன் உள்ளே சென்ற பல ஆயிரம் பேருக்கு உள்ளே நுழைய அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ரசிகர்கள், ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மிகவும் மோசமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். இதனால் “எங்கள் வாழ்க்கையில் இந்த சம்பத்தை மறக்க முடியாது” என பாதிக்கப்பட்ட ரசிகர்கள் சிலர் தங்களது சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்:
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் X பக்கத்தில் ஒரு பதிவினை இன்று வெளியிட்டிருக்கிறார். அதில், “அன்பார்ந்த சென்னை மக்களே, சில மோசமான சூழ்நிலைகளால் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனவர்கள் உங்களது டிக்கெட் நகலை arr4chennai@btos.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்புங்கள். அத்துடன், எந்த வகையிலான பிரச்சனையை சந்திந்தீர்கல் என்பதையும் குறிப்பிடுங்கள். எங்களது குழுவினர் உங்களை தொடர்பு கொள்வர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
விசாரிக்க டிஜிபி உத்தரவு:
தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் நடந்தது என்ன என்பது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்திடம் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க தாம்பரம் காவல் ஆணையருக்கு அவர் அந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த சம்பவம் தாம்பரம் காவல் எல்லைக்குள் நடந்துள்ளது. இதனால், அந்த பகுதியின் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இது போன்ற பெரிய நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு முன்னர், உள்ளாட்சி அமைப்பு, மின்வாரியம், மருத்துவம் சார்ந்த துறைகளிடம் முன் அனுமதி பெறுவது கட்டாயம். இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மேற்கூறிய துறைகளிடம் அனுமதி பெற்றார்களா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், இது இது உட்புறமாக (indoor) நிகழ்ச்சி என்பதால் இதற்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்றும் கூறாடுகிறது. ஆனால், இந்த நிகழ்ச்சியால் பலர் பாதிக்கப்பட்டது மட்டுமன்றி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் விற்பனை முடிந்தும் மீண்டும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவையெல்லாம் ஏன் நடந்தது என்பது குறித்து போலீஸார் விசாரிக்க உள்ளனர்.
மேலும் படிக்க | உயிருடன் வந்த ரோஹித்..பூஜாவுக்கு சிறை தண்டனை - மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ