திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்சத்துறையினர் சோதனை

திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்சத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்

Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jan 8, 2022, 09:14 AM IST
திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்சத்துறையினர் சோதனை  title=

திண்டுக்கல்: திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்சத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

ஒப்பந்தக்காரர்களிடம் லஞ்சம் கேட்டது தொடர்பாக தொடர்ந்து பலரும் புகார் செய்துவந்தனர். அதிலும் குறிப்பாக, ஒப்பந்தக்காரர்கள் செய்த பணிகளுக்கு பணம் கேட்டு தொல்லைப்படுத்துவதாக புகார்கள் வந்தன.

கோட்ட பொறியாளர் மதன்குமார் லஞ்சம் கேட்பதாக வந்த புகார்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

திண்டுக்கல்
லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருடன் இணைந்து மாவட்ட ஆய்வுக்குழுவும் இந்த சோதனைகளில் ஈடுபட்டது. 

லஞ்ச ஒழிப்பு காவல்துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் ஆய்வாளர் ரூபா கீதாராணி மற்றும் ஐந்து பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

திண்டுக்கல்

இந்த திடீர் சோதனையில், திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மதன்குமார் அறையில் ரூ 4 லட்சத்து 70 ஆயிரம் பணம் இருந்தது.

கணக்கில் வராத இந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்துறையில் பணிபுரிபவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ALSO READ | கொரோனாவால் ரத்தாகும் திருமணங்கள்! திருக்கடையூர் ஆலயத்தில் திருமணங்கள் ரத்து 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News