சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் கிழக்குப் பகுதி திமுக சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சரும் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருவொற்றியூர் கிழக்குப் பகுதி செயலாளரும் மண்டல குழு தலைவருமான திமுக தனியரசு ஏற்பாட்டில் சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கலந்து கொண்டு 20 பெண்களுக்கு தையல் இயந்திரம், ஒரு கல்லூரி மாணவருக்கு மடிக்கணினி மற்றும் 1000 பேருக்கு தலா 5 கிலோ அரிசி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் படிக்க | ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசை அறிவித்த அரசு! நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்!
இதில் மாநில மீனவர் அணி துணைத்தலைவர் கேபி சங்கர் எம்எல்ஏ, மேற்குப் பகுதி செயலாளர் வைமா அருள்தாசன், உள்பட மாவட்ட பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளை கலந்து கொண்டனர். பின்னர் மேடையில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், தலைநகர் சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை திமுக நெருப்பு திராவிட பற்று திராவிட நெருப்பு உள்ள பகுதி திருவொற்றியூர். இங்குதான் பெரியாரின் வெப்பம், அண்ணாவின் அரசியல் அணுகுமுறை, கலைஞரின் தியாகம், தனி பற்று, தளபதியின் உயிர் நாடி உதயநிதி எதிர்பார்ப்பு. திருவொற்றியூர் என்பது ஊரின் பெயர் அல்ல தளபதியின் கோட்டை. தலைவரை மாற்றாமல் தத்துவத்தை மாற்றாமல் எண்ணத்தை மாற்றாமல் சின்னத்தை மாற்றாமல் என்றைக்கும் திமுகவின் தொண்டனை பொருத்தவரை பிச்சைககாரனாக இருந்தாலும் திமுக கட்சிக்காரனாக எழுந்து நிற்கின்ற பெருங்கூட்டம் திமுகவின் கூட்டம்.
நடிகர் விஜயோ நாம் தமிழர் சீமானோ உரசி பார்க்க முடியாது திமுக எஃகு கோட்டை. தந்தை பெரியார் பெரும் நெருப்பு, பேரறிஞர் அண்ணா அன்பு கடல் கலைஞர் ஆற்றல் மிக்க தலைவர், தளபதியின் அயராத உழைப்பு இந்த ஒட்டுமொத்த வடிவம் உதயநிதி. இந்த ஐந்து தலைவர்கள் போல மாற்றுக் கட்சியில் தலைவர்கள் இருப்பதாக சொல்ல சொல்லுங்கள். பெரியார் அண்ணா கலைஞர் தளபதி உதயநிதி திமுகவின் தலைவர்கள். எடப்பாடி பழனிச்சாமி தலைவர் இதைப் பற்றி சொன்னால் என்ன சொல்வார்? திராவிடம் குறித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு என்ன தெரியும் என கேள்வி எழுப்பினார். கடை கோடி தொண்டனை பேச சொன்னாலும் சிறப்பாக பேசுகின்ற தொண்டனை கொண்ட கட்சி திமுக. பேசி பேசி வளர்ந்த கட்சி திமுக, கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் கலைஞர் வீட்டு தட்டுமுட்டு சாமானும் கவிதை படிக்கும் பேசத் தெரிந்த கூடாரம் திமுக.
97 வயதில் கண்ணாடி போட்டு பார்வை தெரியாமல் பூதக்கண்ணாடி வைத்து படித்து எழுதியவர் பெரியார். தமிழ்நாடு ராமருக்கு இடமில்லாமல் ராமசாமி பூமியாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. ஆந்திரா, கேரளா, உத்தரபிரதேசம், குஜராத் பறிபோனது. டெல்லி கைநழுவி போனது வெற்றி பெற்றது தமிழ்நாடு. லட்சாதிபதி கோட்டீஸ்வரர் மிராசுதாரர் கட்சி திமுக இல்லை ஏழைகளுக்காக தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரே கட்சி இந்தியாவில் திமுக மட்டும்தான். ஓலை குடிசையில் பிறந்த ஏழைத் தொண்டனை ஒரே தொகுதியில் மூன்று முறை நிற்க வைத்து வெற்றி பெற செய்து உயர்கல்வித்துறை அமைச்சராக உருவாக்கியது திமுக. தவிர எந்த கட்சியாலும் முடியாது இதுதான் திராவிட மாடல் ஆட்சி தளபதியின் அற்புதமான சாதனை.
ஒரு நாளைக்கு அம்பேத்கர் படத்திற்கு பூ வைத்து விட்டால் விஜய் என்ன வாழும் அம்பேத்கரா அம்பேத்கர் படத்துடன் போஸ் கொடுத்தால் மட்டும் போதுமா? அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அம்பேத்கர் கல்லூரி அம்பேத்கரின் படத்தை ஒரு ரூபாய் நாணயத்தில் பதிக்க வைத்த தலைவர் கலைஞர். விபி சிங் பிரதமராக இருந்தபோது மண்டல் கமிஷன் அறிக்கை பயன்படுத்தி பார்ப்பனர் ஆரிய கூட்டம் மத யாத்திரை என்ற பெயரில் ராமர் படத்தை வைத்து நாட்டை கெடுக்க நினைத்தபோது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டை அறிவித்தவர் வி பி சிங். அந்த விபி சிங்கின் சிலையை அவர் பிறந்த மாநிலத்தில் வைக்கவில்லை அவரது முழு உருவ சிலையை சென்னையில் வைத்தவர் முதலமைச்சர் முக ஸ்டாலின். அறிவு ஆற்றல் தியாகக் கூடாரம் அவருடைய பேரன். உதயநிதி 1000 கலைஞரை விட மேலான கலைஞராக இன்று சனாதனத்தை எதிர்க்கிறார். முதலமைச்சர் மகன் ஆயிரம் மடங்கு பெருமை அதைவிட கலைஞரின் பேரன் என்று திமுக தொண்டன் கொண்டாடுகிறான் பகுத்தறிவு புரட்சி தொடரட்டும் என்று பேசினார்.
மேலும் படிக்க - குழந்தைகள் எந்த வயது வரை பெற்றோருடன் தூங்கலாம்? இதை தெரிஞ்சிக்கோங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ