தூத்துக்குடியில் புதூர் பாண்டியாபுரம் விளக்கு பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் இன எழுச்சி பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அதில், தூத்துக்குடி விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் தமிழர்களுக்கு உதவி செய்வதாக நினைத்தால் தடையை நீக்க வேண்டும் இல்லாத இயக்கத்திற்கு எதற்கு தடை எங்களைப் பார்த்து அஞ்சுகிறார்கள் அச்சப்படுகிறார்கள். தமிழகத்தில் குடியேறியுள்ள இலங்கை தமிழர்களுக்கு 35 ஆண்டுகளாக குடியுரிமை வழங்க மறுக்கப்பட்டு வருகிறது கேட்டால் தடையை மீறி குடியேறியவர்கள் என்கிறார்கள் இந்தியா தலையிடவில்லை என்றால் தனி தமிழ் ஈழம் பிறந்து 20 ஆண்டுகள் ஆயிருக்கும் , எங்கள் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை தான். குடித்து செத்தவனுக்கு ரூபாய் 10 லட்சம் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவனுக்கு ஐம்பதாயிரம் எப்படிப்பட்ட ஆட்சி திராவிட மாடலா இவ்வளவு கேவலப்பட்ட மாடலாக உள்ளது குடிச்சு செத்தவனுக்கு குடிக்காதவன் வரிப்பணத்தில் இருந்து காசு கொடுக்கப்படுகிறது பேனா சிலைக்கும் சமாதிக்கும் கணக்கு சொல்ல வேண்டும்.
மேலும் படிக்க | நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலாவிற்கு தடை..
தூத்துக்குடி ஜூன் 13 முதல் அரசியல்பயணம் தொடக்கம் கன்னியாகுமரியில் இருந்து பயணம் தொடங்க உள்ளது, டிசம்பரில் பொதுக்குழு நடைபெறும். ஜனவரி முதல் தேர்தல் பரப்புரை தினமும் கூட்டம் நடைபெறும். தேர்தல் முன்பே வரும் என்கிறார்கள் நமக்கு எப்பொழுது வந்தாலும் கவலை இல்லை. நாம் தமிழர் கட்சி 24 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் 20 பெண்கள் 20 ஆண்கள் போட்டியிடுவர். அதிமுக திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இனி வளர முடியாது, அவ்வளவுதான் ஆனால் தமிழ் ஈழ பரம்பரை வளர்ந்து கொண்டே இருக்கும். தமிழக மீனவர்கள்களின் வாழ்வாதாரத்தை காக்க கட்சத்தீவை மீட்க வேண்டும். இலங்கையில் இந்து கோவில்கள்களை இடித்துவிட்டு புத்தர் கோவில் கட்டப்படுகிறது. திபத்தில் இருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை கொடுத்துள்ளீர்கள். எங்களுக்கு ஏன் குடியுரிமை தர மறுக்கிறாய். இனத்தின் விடுதலை ஒன்று தான் எங்களின் இலகக்கு. விசராயம் குடித்தவர்களுக்கு 10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
குடிச்சு செய்தவனுக்கு குடிக்காத வன் கட்டிய வரிப்பணத்தில் கொடுப்தற்கு நீங்கள் யார்? மக்களின் நலம் சார்ந்து தான் நாம் தமிழர் கட்சியினர் இருக்கின்றனர். தமிழர்களுக்கு நல்லது கெட்டது எது நடக்கவேண்டும் ஆனாலும் தமிழகத்தில் தான் தொடங்கும். கண்முன்னே நமது வளங்கள் திருடுபோகிறது அதை நாம் தடுக்க முடியவில்லை. எந்த அதிகாரத் தாலும் மீட்க முடியாதது வளக்கொள்ளை.எந்த நாட்டிலும் குருதி மை கொடையாக கொடுப்பவர்கள் தமிழர்கள் தான் அதிமுக திமுக பெரிய கட்சி அதையெல்லாம் வீழ்த்த முடியுமா? அதிமுக திமுக இனி வளராது தமிழ் ஈழம் வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.
நீட் தேர்வு கொண்டு வந்து காங்கிரஸ் தான் திமுக ஆதரவு அளித்தனர். இவர்கள் வளர்க்கின்றனர். பள்ளி கட்டிடங்களை சீரமைக்க நிதி இல்லை என்று சொல்கின்றனர். ஆனால் பேனா விற்க்கும், சமாதிக்கும் எங்கிருந்து நிதி வருகிறது. பாஜக விற்க்கு திடீரென ஈழ தமிழர்கள் மீது பாசம் வருகிறது. கேரளா மீனவர்கள் எல்லை தாண்டி போகிறார்கள். அவர்களை இலங்கை தொடாது. இலங்கைக்கு தமிழன் என்ற இனம் தான் பிரச்சினை. ஜீன் 13ல் கன்னியாகுமரியில் இருந்து என்னுடைய பயணம் தொடங்கி ஆகஸ்ட்க்குள் முடிவடையும். ஜனவரியில் இருந்து தேர்தல் பரப்புரையை தொடங்குவோம் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
மேலும் படிக்க | திராவிட நிலப்பரப்பில் அகற்றப்பட்ட பாஜக... ஸ்டாலினின் அடுத்த பிளான் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ