சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு உள்ளது. தமிழகத்திலும் தொற்றின் அளவில் பெரிதாக வீழ்ச்சியைக் காண முடியவில்லை.
வெள்ளியன்று தமிழ்நாட்டில் 36,184 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இன்றைய தொற்று எண்ணிக்கையுடன் சேர்த்து, தமிழகத்தில் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,70,988 ஐ எட்டியுள்ளது.
இன்று கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டு 467 பேர் தமிழகத்தில் இறந்தனர். இதனுடன் தொற்று பாதிப்பால் தமிழகத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,598 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. இன்று 24,478 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மாநிலத்தில் 14,76,761 ஆக உயர்ந்துள்ளது.
Tamil Nadu reports 36,184 new #COVID19 cases, 24,478 recoveries and 467 deaths in the last 24 hours.
Total cases 17,70,988
Total recoveries 14,76,761
Death toll 19,598Active cases 2,74,629 pic.twitter.com/ogvNw89KaI
— ANI (@ANI) May 21, 2021
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 2,74,629 ஆக உள்ளது.
சென்னையில் (Chennai) மட்டும் இன்று ஒரே நாளில் 5,913 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 109 பேர் உயிர் இழந்தனர்.
இன்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று அரசு மருத்துவமனைகளில் 299 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 168 பேரும் உயிர் இழந்தனர். கொரோனா சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 128 பேர் இன்று தமிழகத்தில் உயிர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: 2DG Drug Test: தமிழகத்தில் 2DG பரிசோதனை முடிவுகள் என்ன சொல்கிறது?
நேற்று முதன் முறையாக தமிழகத்தின் ஒரு நாள் தொற்று எண்ணிக்கை 35,000-ஐத் தாண்டியது. இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதற்கு முந்தைய நாள், தமிழகத்தின் ஒரு நாள் தொற்று முதன் முறையாக 34,000-ஐத் தாண்டியது. அதற்கு முந்தைய நான்கு நாட்களுக்கு சுமார் 33,000 என்ற அளவில் தொற்றின் எண்ணிக்கை இருந்தது.
இந்த நிலையில், இன்று தமிழகத்தின் தொற்று எண்ணிக்கை, 36,000-ஐத் தாண்டியுள்ளது. இது மக்கள், நிர்வாகம் என அனைவருக்கும் அச்சத்தை அதிகப்படுத்தி உள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க அரசு (TN Government) பல வித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், மே 24 ஆம் தேதி தமிழகத்தில் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், நாளை முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் ஒரு முக்கிய ஆலோசனையை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோரது கருத்தை கேட்டு அதற்கேற்ப பல புதிய முடிவுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுக்கக்கூடும். தமிழகத்தில் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அரசு ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, 18 முதல் 44 வரையிலான வயதினருக்கு தமிழ்நாட்டில் இலவசமாக COVID-19 தடுப்பூசி செலுத்தும் செயல்முறையை நேற்று திருப்பூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். 12,000 பணியாளர்களைக் கொண்ட நேதாஜி ஆடை பூங்காவில் இந்த தடுப்பூசி செயல்முறை தொடங்கியது, அனைத்து தகுதிவாய்ந்த ஊழியர்களும் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வ வெளியீட்டில் குறிப்பிடப்பட்டது. முதக்வர் ஸ்டாலின் அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.
ALSO READ: Chennai Oxygen Messiahs: இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் ஆட்டோ சேவை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR