சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதல் ஆரம்பமான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆரம்ப முதலே முன்னிலை பெற்ற திமுக பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஆனால் யாரும் நினைத்துக்கூட பார்க்காத அளவுக்கு மற்றும் இதுவரை இல்லாத வகையில் மிக மோசமான தோல்வியை நோக்கி செல்கிறது. தற்போது வரை அதிமுக சொற்ப இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
ஒருவேளை அதிமுக மற்றும் பாமக கூட்டணியாக களம் கண்டிருந்தால், இந்த தேர்தலில் இன்னும் சில கூடுதலான இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம். தனித்தனியாக போட்டியிட்டதால், அதிமுக மற்றும் பாமக இரண்டு கட்சிக்கும் பாதகமாக அமைந்துள்ளது.
ALSO READ | AIADMK vs PMK பிரேக் அப்! ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டி
வட மாவட்டங்கள் எங்கள் கோட்டை எனக்கருதி, அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக தனித்துப் போட்டி என அறிவித்தது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மற்றும் வட மாவட்டங்களில் கணிசமான வாக்குவங்கி பா.ம.க-வுக்கு உள்ளததால் தான் இதற்கு காரணம் எனப் பேசப்பட்டது.
முன்னதாக சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல்களில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்து.
தற்போதைய நிலவரப்படி முன்னிலை நிலவரம்:
மாவட்ட கவுன்சிலர்கள்:
திமுக + = 67
அதிமுக += 4
பாமக =1
ஒன்றிய கவுன்சிலர்கள்:
திமுக + - 198
அதிமுக + - 23
பாமக - 7
அமமுக - 1
சுயேச்சைகள் - 7
ALSO READ | TN Local Body Election Results 2021 LIVE: திமுக தொடர்ந்து முன்னிலை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR