கடைகள், வழிபாட்டு தலங்களை மூடும் அரசின் முடிவு வரவேற்கதக்கது: OPS

தமிழகத்தில் இரண்டாவது அலையில் தொற்று உச்ச அளவை எட்டி, பின் தற்போது கட்டுக்குள் இருந்தாலும், மீண்டும் கொரோனா  தொற்று பரவல் பல இடங்களில் அதிகரித்து வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 1, 2021, 01:50 PM IST
கடைகள், வழிபாட்டு தலங்களை மூடும் அரசின் முடிவு வரவேற்கதக்கது: OPS  title=

தமிழகத்தில் இரண்டாவது அலையில் தொற்று உச்ச அளவை எட்டி, பின் தற்போது கட்டுக்குள் இருந்தாலும், மீண்டும் கொரோனா  தொற்று பரவல் பல இடங்களில் அதிகரித்து வருகிறது. 

மேலும் அண்டை மாநிலமான கேரளாவில், தொற்று பாதிப்பு பெரிய அளவில் பரவி வருவதோடு, இந்தியாவின் மொத்த தொற்று எண்ணிக்கையில், பாதி அளவு பாதிப்பு கேரளாவில் உள்ளது. 

இந்நிலையில், கொரோனா 3ம் அலை (Corona Third Wave) பரவலை ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்தும் நோக்கில், கொரோனா பரவல் அச்சம் காரணமாக கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று முன் தினம், சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் கடைகளை அடைக்க மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. 

இந்த முடிவுகளை, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வரவேற்றுள்ளார். தொற்று பரவலை ஆரம்ப கட்டதிலேயே கட்டுப்படுத்தவும், மூன்றவாது அலை ஏற்படாமலிருக்கவும் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். 

ஆடி மாதத்தில் பண்டிகை நாட்களில் பக்தர்கள் கோவில்களில் கூடுவதை தடுக்கும் வகையில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து அந்தந்த பகுதி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

பிரசித்தி பெற்ற கோவில்களில் ஆடி மாதத்தில், ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்க, ஆடி வெள்ளிக் கிழமை போன்ற நாட்களில், சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தரும் நிலயில் தொற்று பரவும் அபாயம் மிகவும் அதிகரிக்கும் என்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Also Read | தமிழகத்தில் 3வது அலையை தடுக்க நடவடிக்கை: சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்

கோயில்கள் மூடப்படுவது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், கொரோனா நோய் தொற்று பரவல் சற்று அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 9ம் தேதி வரை தளர்வுகளின்றி ஊரடங்கை நீட்டித்து உள்ளதாக கூறினார்

மேலும், அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களில் மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், காவல் துறையினர் ஆகியோர், பொதுமக்கள் நலன் கருதி  அந்த பகுதியை மூடுவது தொடர்பான முடிவுகளை எடுக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளார். நாளை ஆடி கிருத்திகை விழாவிலும், நாளை மறுநாள் ஆடிப்பெருக்கு விழாவிலும் பொதுமக்கள் லட்சக்கணக்கில் கூடுவார்கள் என்பது  குறிப்பிடத்தக்கது. 

Also Read | சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 7 மார்க்கெட்கள் ஆகஸ்ட் 9 வரை மூடப்பட்டது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News