உதயநிதி ஸ்டைலில் கல்லை கையில் எடுத்த அதிமுக நிர்வாகி! பிரச்சாரத்தில் சரமாரி கேள்வி

Kalanithi Veerachamy: வட சென்னையில் திமுக எம்பி கலாநிதி வீராச்சாமி கேந்திரிய வித்யாலயா பள்ளி பணிகளுக்கு பூஜை போட்டு ஓராண்டுகள் ஆகியும் பணிகள் தொடங்கவில்லை என அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 6, 2024, 08:02 AM IST
  • கலாநிதி வீராசாமிக்கு எதிராக பிரச்சாரம்
  • களத்தில் கடுமையாக விமர்சிக்கும் அதிமுக
  • உதயநிதி ஸ்டைலில் செங்கல்லை காட்டி பதிலடி
உதயநிதி ஸ்டைலில் கல்லை கையில் எடுத்த அதிமுக நிர்வாகி! பிரச்சாரத்தில் சரமாரி கேள்வி title=

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள் ஆகியும் எந்த பணிகளும் இன்னும் தொடங்கவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையோடு அடிக்கல் நாட்டப்பட்ட அல்லது அதற்கு பிறகு அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் எல்லாம் இப்போது மக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. ஆனால், மதுரையில் மட்டும் எய்ம்ஸ் பணிகள் இன்னும் பூஜ்ஜிய நிலையிலேயே இருக்கின்றன. இது குறித்து திமுக எம்பிகள் நாடாளுமன்றத்தில் பலமுறை கேள்வி எழுப்பியபோதும் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது செங்கல் ஒன்றை எடுத்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய செங்கல் இதுதான் என பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மேலும் படிக்க | திமுக, பாஜக குறித்து கடுமையாக விமர்சித்த நடிகை விந்தியா

அந்த பிரச்சாரம் மக்களிடையே வெகுவாக ரீச்சானது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் மற்றும் வாக்குறுதி குறித்து மக்களும் கேள்வி எழுப்ப தொடங்கினர். இதே பாணியில், அதாவது உதயநிதி ஸ்டாலின் பாணியில் திமுக எம்பியை அதிமுக நிர்வாகி ஒருவர் கல்லை கையில் எடுத்து கேள்வி எழுப்பியுள்ளார். 6 ஏக்கரில் வட சென்னையில் கேந்திரிய வித்தியாலயா பள்ளிக்கு அந்த தொகுதி திமுக எம்பி கலாநிதி வீராச்சாமி ஓராண்டு முன்னர் அடிக்கல் நாட்டினார். ஆனால் அந்த பணிகள் ஏதும் இதுவரை தொடங்கவில்லை. இதனை குறிப்பிட்டு வட சென்னையில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராயபுரம் மனோவை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக ஐடி விங் காஞ்சிபுர தலைவர் கார்த்திக் என்பவர் செங்கல் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு, கேந்திரி வித்தியாலயா பள்ளி அடிக்கல் நாட்டப்பட்ட நிலையிலேயே இருப்பதாக குற்றம்சாட்டினார். 

ஓராண்டுகளுக்கும் மேலாகியும் கேந்திரிய வித்தியாலயா பள்ளி பணிகள் தொடங்கவில்லை என்றும், அடிக்கல் நாட்டிய செங்கலைக் காட்டி அவர் தெரிவித்தார். உதயநிதி ஸ்டைலில் செங்கல்லைக் காட்டி அவர் செய்த பிரச்சாரம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. வடசென்னை தொகுதியை பொறுத்தவரை அதிமுக சார்பில் ராயபுரம் மனோ, திமுகவில் சிட்டிங் எம்பி கலாநிதி வீராச்சாமி, பாஜகவில் பால் கனகராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

மேலும் படிக்க | பெற்றோர் கவனத்திற்கு.... இந்த வகுப்புகளுக்கு ஏப்.12 வரை ஸ்பெஷல் கிளாஸ்... தேர்வுகள் ஒத்திவைப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News