திருநெல்வேலியில் நடைபெறும் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நெல்லைக்கு வந்திருந்தார். அவர் தங்கி இருந்த விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, கடந்த 24 ஆம் தேதி எங்களது கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டி அதில் அனைவரின் கருத்துக்களை கேட்டேன். அதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. தலைவர் என்ற முறையில் முடிவு எடுப்பதற்கான அதிகாரத்தை எனக்கு அளித்துள்ளனர்.
மேலும் படிக்க | பாஜகவில் இணையப்போகும் முக்கிய அரசியல்வாதிகள் யார்? எல் முருகன்
அதிமுகவுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும் என்னை அழைத்து பேசியுள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தல் தான் நமது இலக்காக உள்ளது. எனினும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்க வேண்டி உள்ளது. யாருடன் கூட்டணி எந்த தொகுதியில் நான் போட்டியிடுகிறேன் என்பது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் முடிவு செய்வோம். தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வருவதாக அறிவித்து வருகிறது. ஆனால் செயல்படுத்தப்படுகிறதா என்பதை பார்க்க வேண்டும்.
இலவசங்களை அள்ளி விடுவதால் மிகப்பெரிய கடன் சுமைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. 8.3 லட்சம் கோடி கடன் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. கல்வியையும், சுகாதாரத்தையும் தவிர மற்ற இலவசங்கள் தவிர்க்கப்பட வேண்டும். அப்போது தான் பொருளாதாரத்தில் வலுவான மாநிலமாக மாற முடியும். ஜனநாயகம் தற்போது பணநாயகமாக மாறிவிட்டது. வாக்குகளை விலை கொடுத்து வாங்கி விடலாம் என்ற நம்பிக்கை அரசியல் கட்சிகள் இடையே அதிகரித்து வருகிறது. பல்வேறு விஷயங்களில் சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினர் போல பேசிக் கொண்டிருக்கிறார்" என்று கூறினார்.
மேலும் படிக்க | அமைச்சர் பெரியசாமிக்கு எதிரான வழக்கு: சபாநாயகர் ஒப்புதல் சரியே - உயர்நீதிமன்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ