அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தலைமையில் நாளை தேனியில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருந்தது. முன்னதாக தேனியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் அவரது இல்லத்தில் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அடைந்த படுதோல்வியை காரணமாக வைத்து இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் இருந்து மீண்டு, பழையபடி வெற்றி பெறுவதற்கான வழிகள் இந்த கூட்டத்தில் பேசப்பட்டது.
மேலும் படிக்க | கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை..!
இதில் முக்கியவிசயமாக சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்க சொல்லி அனைவரும் வலியுறுத்தினர். அதிமுகவின் ஓட்டுக்கள் பல பக்கம் சிதறுகிறது. இதனை சரிசெய்ய இவர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்று திட்டவட்டமாக வலியுறுத்தினர். இதனைக் கேட்டுக் கொண்ட ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நாளை முறைப்படி தேனி மாவட்ட அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவும் செய்தியாளர் சந்திப்பில் சசிகலாவை கட்சியில் இணைக்க வலியுறுத்தினார். இந்நிலையில் இந்த விசயங்களை அறிந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டு இந்த விசயத்தை அப்படியே விட சொல்லி வலியுறுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த இருவருக்கும் இடையில் முட்டல் மோதல் இருந்து வருகிறது. இந்த சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம் என்ன முடிவு எடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்த சமயத்தில் சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி நாளை தேனியில் நடைபெறவிருந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் அறிவித்துள்ளார். எடப்பாடி தரப்பு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை சமாதானம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் தான் இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க | திமுக தலைவர் ஸ்டாலின் காட்டிய அதிரடி - அடங்கி போன சேலம் நிர்வாகிகளின் ஆட்டம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR