இன்று முதல் அக்னி நட்சத்திரம், சுட்டெரிக்கும் கத்திரி வெயில் ஆரம்பம்: மக்களே உஷார்!!

வழக்கமாக அக்னி நட்சத்திரத்தின் போது சூரியனின் வீரியம் அதிகரிக்கும். பூமி உஷணத்தைக் கிளப்பும் வேகமும் இந்த காலத்தில் அதிகமாக இருக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 4, 2021, 06:10 AM IST
  • அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று முதல் (மே 4, 2021) தொடங்குகிறது.
  • இந்த கத்திரி வெயில் மே மாதம் 28 வரை நீடிக்கும்.
  • முடிந்தவரை மதிய வேளையில், அதாவது சூரியன் உச்சி வானில் இருக்கும்போது வெளியே செல்வதைத் தவுர்க்கவும்.
இன்று முதல் அக்னி நட்சத்திரம், சுட்டெரிக்கும் கத்திரி வெயில் ஆரம்பம்: மக்களே உஷார்!! title=

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று முதல் (மே 4 ஆம் தேதி) தொடங்குகிறது. வெயிலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த கத்திரி வெயில் மே மாதம் 28 வரை நீடிக்கும். 

வழக்கமாக அக்னி நட்சத்திரத்தின் போது சூரியனின் வீரியம் அதிகரிக்கும். பூமி உஷணத்தைக் கிளப்பும் வேகமும் இந்த காலத்தில் அதிகமாக இருக்கும். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, கத்திரி வெயில் காலத்தில்தான் கோடைக் காலத்தில் மிக அதிக வெப்பம் உணரப்படுவது வழக்கம். 

ஏற்கனவே கொரோனா பாதிப்பால் அவதியில் இருக்கும் மக்கள் தற்போது கத்திரி வெயிலின் வீரியத்தையும் சகித்தாக வேண்டும். பொதுவாக, வீடுகளில் சூடு அதிகமாக இருந்தால், மாலை வேளைகளிலும், இரவு நேரங்களிலும் மக்கள் வீட்டை விட்டு வெளியே நடந்து வருவது வழக்கம். இந்த கொரோனா காலத்தில் அதுவும் செய்ய முடியாது என்பதால், கத்திரி வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு மிக அதிகமாக காணப்படும் என்று தெரிகிறது.

தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. அக்னி நட்சத்திரம் (Agni Natchathiram) தொடங்குவதற்கு முன்பே ஒருசில நகரங்களில் வெயிலின் அளவு உச்சத்தைத் தொட்டு வருகிறது. 

எனினும், கொரோனா (Coronavirus) காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதாலும், பல அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதாலும், சாலைகளில் வெயிலின் நேரடி தாக்கத்துக்கு ஆளாவதை மக்கள் தடுக்க முடியும்.

ALSO READ: மருத்துவ பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முக்கிய முடிவு: PMO

இதற்கிடையில், ஒரு வார காலம் முன்பு தமிழகத்தில் கோடை மழையும் பெய்ததால், வெப்பம் சற்று கட்டுக்குள் இருந்தது. எனினும், தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

கத்திரி வெயிலில் உங்களுக்கு உதவக்கூடிய சில உதவிக்குறிப்புகள்:
- அதிகமாக தண்ணீர் (Water) அருந்துங்கள். வெயிலின் வெப்பத்தால் ஏற்படும் வியர்வையால் உடலில் நீர் சத்து குறையும். ஆகையால் அவ்வப்போது நீர் அருந்திக்கொண்டே இருப்பது நல்லது.
- காரமான உணவுகளையும், எண்ணெய் பதார்த்தங்களையும் தவிர்ப்பது நல்லது.
- இளநீர், பனை நுங்கு ஆகியவற்றை அடிக்கடி உட்கொள்வது நல்லது.
- அதிக அளவில் நீர்மோரை உட்கொள்ளவும்.
- எலுமிச்சை சாறு உங்கள் உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலை அளிக்கும். ஆகையால் அதை அடிக்கடி குடிப்பது நல்லது.
- தண்ணீரில் உப்பு மற்றும் சர்க்கரை கலந்து குடிப்பதால் உடலின் நீரிழப்பு சீர் செய்யப்படும்.
- வெளியே செல்லும்போது கண்டிப்பாக குடை எடுத்துச் செல்லவும். சூரியனின் நேரடி கதிர்களின் தாக்கத்துக்கு ஆளாவது ஆபத்தாகிப் போகலாம்.
- முடிந்தவரை மதிய வேளையில், அதாவது சூரியன் உச்சி வானில் இருக்கும்போது வெளியே செல்வதைத் தவுர்க்கவும்.

ALSO READ: வாக்களித்த மக்களுக்கு நன்றி, படிப்படியாக வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்: மு.க. ஸ்டாலின்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News