கொரோனாவுக்கு பிறகு மக்களின் வாழ்க்கைமுறையில் மாற்றங்கள் வந்த நிலையில், மாறிய வாழ்க்கையில் இருந்து இயல்புவாழ்க்கைக்கு மாறுவது பலருக்கும் சிரமமாக இருக்கிறது.
வழக்கமாக பள்ளிக்கு செல்வதற்கு அடம் பிடிக்கும் குழந்தைகளைப் போல, அம்மாவை பிரிந்து அங்கன்வாடிக்கு செல்லமாட்டேன் என்று அழும் குழந்தையின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிறது.
கேரளாவில் நேற்று முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவங்கிய நிலையில் அடம்பிடிக்கும் குழந்தை வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, கேரள மாநிலத்தில் தற்போது பள்ளிகளில் தொடர் நேரடி வகுப்புகள் துவக்கின. இரு தினங்களுக்கு முன்னதாக அதற்கான துவக்ககவிழா நடைபெற்றது குறிபிடத்தக்கது.
மேலும் படிக்க | வைரலாகும் குழந்தையின் கியூட் செயல் வீடியோ
இந்த நிலையில், நேற்று நேரடியாக வகுப்புகள் ஆரம்பித்த நேரத்தில் பல மாணவர்கள் உற்சாகமாக பள்ளிகளுக்கு சென்றனர். ஆனால், அங்கன்வாடிகளுக்கு செல்லும் குழந்தைகள் முதல் முதலாக பெற்றோர்களை பிரிந்து புத்தாடைகள் புதிய புத்தக பைகளோடு சென்றனர்.
பள்ளிக்கு செல்லும் மழலை முகங்களின் பல்வேறு பாவனைகளுக்கு பதில் அளிக்கும் பெற்றோர்களும் பல்வேறு உணர்ச்சிகளை காட்டினார்கள்.
உற்சாக , சந்தோஷம், எதிர்பார்ப்பு என பெற்றோரும், குழந்தைகளும் தங்கள் உணர்வுகளைக் காட்டினர். பெற்றோர் இல்லாமல் முதல் முறையாக பள்ளிகூடத்திற்கு பல குழந்தைகள் அழுது கொண்டு சென்றாலும், ஒரு வீடியோ வைரலாகிறது.
மேலும் படிக்க | நாயை தூக்கிச்செல்லும் சிறுத்தை: திகிலூட்டும் சிசிடிவி காட்
திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ஒரு குழந்தை அம்மாவை பிரிந்து அங்கன்வாடிக்கு செல்ல மாட்டேன் என்று அழுவது வைரலாகிறது. புத்தாடை அணிந்திருக்கும் பிஞ்சு குழந்தை அழுகிறது.
நான் அம்மாவை பிரிந்து செல்லமாட்டேன் சேட்டைகள் இன்றி வீட்டில் இருப்பேன் படிப்பு எனக்கு பிடிக்காது என்று அழுதுகொண்டே சொல்வது பார்க்கவே க்யூட்டாக இருக்கிறது என்றாலும், புது இடத்திற்கு போக தயங்கும் குழந்தையின் தயக்கமும் தெரிகிறது.
இந்த க்யூட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | கம்பீரமாக நடக்கும் யானையை வியந்து பார்க்கும் மக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR