நாடு முழுதும், மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டியில் பிளஸ் 2 தேர்வு நடத்தப்படாவில்ல.
இந்த நிலையில், நீட் தேர்வு (NEET Exam) வருகிற செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன்படி அரசு பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளிகள் வாயிலாக நீட் தேர்வுக்கு [National Eligibility cum Entrance Test (Undergraduate)] விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களை ஒன்றிணைத்து பள்ளியின் வாயிலாக பிழையின்றி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.
ALSO READ | Good News on NEET 2021: நீட் தேர்வு முறையில் மாற்றம், இண்டர்னல் சாய்ஸ் உண்டு
நீட் தேர்வு விண்ணப்பத்தில் எவ்வித தவறு செய்யாமல் இருக்கவும், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பெற்றோர்கள் உதவி இல்லாமல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நிலை இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த முறை நடைபெற்ற நீட் தேர்வில் 1.17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் அரசு பள்ளியில் மட்டும் பயிற்சி பெற்ற மாணவர்கள் 6500-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், 300க்கும் மேற்பட்டோர் மருத்துவ படிப்புக்கு தேர்வாகி இருந்தனர்.
எனவே இம்முறை 7.5 சதவீத உள் ஒதுக்கீடு இருக்கும் நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் தவறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
ALSO READ | NEET UG 2021 தேதி விரைவில் வெளியீடு, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தேர்வு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR