வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழகத்தின், திருவிக நகர் பகுதி கழகத்தின் சார்பில், சென்னை ஓட்டேரியில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, ரோஸ் மில்க், கிர்னி பழம், மோர் உள்ளிட்ட பழங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஜெயக்குமார், முகத்துவாரங்களில்தான் அதிகமான மீன் உற்பத்தி இருக்கும். பாராம்பரிய மீனவர்கள் அந்த முகத்துவராத்தில் ஒட்டியிருக்கின்ற 10 அல்லது 15 கிலோ மீட்டருக்கு மீன் வளம் பெருகும். இந்த இடத்தில் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படும்போது கண்டிப்பாக குஞ்சுபெறிக்கும் வகையில் நிச்சயமாக இருக்காது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் போய்விடும் என்று அவர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருக்கும் நிலையிலே, அது மட்டுமல்லாமல் மெரினா கடற்கரை என்றாலே அது உலக பிரசித்தி பெற்றது. எங்கிருந்து வந்தாலும் அது இந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் அடையாள சின்னம்.
மேலும் படிக்க | அண்ணாமலைக்கு தமிழர்கள் மீது அக்கறை கிடையாது - இயக்குனர் அமீர்!
உலகிலேயே மிக நீளமான கடற்கரை, இப்போது தென் மாவட்டத்திலிருந்து அல்லது இந்தியாவில் எந்த பகுதியிலிருந்து வந்தாலும் பேனா கடற்கரைக்கு சென்றோம் என்பார்கள். மெரினா என்ற பெயருக்கு பதில் பேனா கடற்கரை என்று வந்துவிடும். அதுவும் அது எழுதாத பேனா, அடையாளம் போய்விடும். மெரினாவிற்கே அடையாளம் என்பது கட்டுமரங்கள், வலைகள், மீன் பிடிக்க செல்லும் அழகு, வலையை உலர்த்துவது, மீன் விற்பனை செய்து போன்று அழகின் முக்கியதும் வாய்ந்த இடம். இதனை எல்லாம் கருதாமல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்தது தவறு. எனவே இதனை மறு பரீலனை செய்யவேண்டும். பேனாவிற்கு கடலில் இடம் இருக்கிறது, ஆனால் பாரம்பரியமாக கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு அங்கு மீன் விற்பனை செய்வதற்கு உரிமை இல்லை. எனவே மீனவர்களின் வாழ்க்கையோடு விளையாடக்கூடாது. எனவே மத்திய அரசை பொறுத்தவரையில் இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும்.
மத்திய சுற்றுசூழல் துறைக்கு கழகத்தின் சார்பில் நானும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் கடுமையான ஆட்சேபனை தெரிவித்தோம். தமிழகத்தில் கொலை கொள்ளை கற்பழிப்பு பாலியல் பலாத்காரம் அதிகரித்து வருகிறது. நில அபகரிப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்திற்கு சென்றவருக்கு இந்த நிலை என்றால் பொது மக்களுக்கு எந்த நிலை. திருநெல்வேலி கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கை வெளிப்படுத்தன்மையுடனும் நேர்மையுடனும் விசாரிக்க வேண்டும். இந்த கொலையில் யார் சம்பந்தப்பட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில் தற்போது அசாதாரண சூழ்நிலை இருந்து வருகிறது. இதையெல்லாம் மக்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.
தமிழகத்தில் திமுக அரசின் சாதனை பட்டன் தட்டினால் மதுபானம் வருவது தான் சாதனையாக உள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஸ்டாலின் உதயநிதி கொடி பிடித்து போராட்டம் நடத்தினார்கள். ஆனால் தற்போது மது கடைகளை அதிகரிப்பது விற்பனை அதிகரிப்பது தான் திமுக அரசின் சாதனையாக உள்ளது. மதுவிலக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கல்லாகட்டும் அமைச்சராக இருந்து வருகிறார். அவருக்கு கல்லாப்பட்டி சிங்காரம் என பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கும். அதிமுக மற்றும் பாஜக தோழமைக் கட்சிகள். ஆனால் பாஜக பொருளாளராக இருக்கக்கூடிய சேகர் என்பவர் அதிமுக குறித்து அவதூறான விமர்சனத்தை தெரிவித்துள்ளார். இதற்கு இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர் பேசியது குறித்து பகிரங்கமாக தவறு என தெரிவிக்க வேண்டும். எங்களுக்கும் இது போன்ற விமர்சனங்கள் வைக்கத் தெரியும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும் படிக்க | பேனா நினைவுச் சின்னம்: மெரினாவின் அடையாளம் போய்விடும்- ஜெயக்குமார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ