நடிகர் விவேக் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல: அரசு ஆய்வுக் குழு

நடிகர் விவேக் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல. உயர் ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 22, 2021, 11:52 AM IST
நடிகர் விவேக் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல: அரசு ஆய்வுக் குழு title=

தமிழ் சினிமாவில் பல கலைஞர்கள் மக்கள் மனதில் நிலையான இடத்தைப் பெற்றுள்ளார்கள். அவர்களின் நடிகர் விவேக்கிற்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. தமிழ் சினிமா ரசிகர்களை, சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்து, சமூக சிந்தனைகளை ஊட்டிய சிற்பி அவர்.

ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி தனது கோடான கோடி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்து நடிகர் விவேக் (Vivek) திடீரென காலமானார். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட அடுத்த நாள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிறிந்தது.

தடுப்பூசி (Vaccination) செலுத்திக்கொண்ட அடுத்த நாள் அவருக்கு மாரடைப்பு வந்ததால், இதற்கு தடுப்பூசி காரணமாக இருக்குமோ என்ற பீதி மக்களை அச்சுறுத்தியது. பல வதந்திகள் பரப்பப்பட்டன. எனினும், தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என மருத்துவர்கள் தெளிவு படுத்தினர். மேலும், நடிகர் விவேக் மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு உள்ளதா என கண்டறியக்கோரி பலர் புகார் அளித்திருந்த நிலையில், அதற்கும் உத்தரவிடப்பட்டது. 

இந்த நிலையில், ‘நடிகர் விவேக் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல. உயர் ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.’ என கொரோனா தடுப்பூசி குறித்து ஆய்வு செய்யும் தேசியக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ALSO READ: விழிப்புணர்வு வித்தகன் விவேக்: சாகும் வரை சமூக சேவை செய்த சிந்தனையாளன்!!

AEFI குழு தடுப்பூசி போட்ட பின் நடக்கும் பின்விளைவுகளை ஆய்வு செய்யும் ஒரு குழுவாகும். அந்த குழு வெளியிட்டுள்ள பட்டியலில் விவேக் மாரடைப்பால் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இன்னும் பலருக்கு  தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் தயக்கம் உள்ள நிலையில், இந்த செய்தி நிவாரணமாக இருக்கும். இதற்குப்பிறகு, இன்னும் பலர் அச்சம் இல்லாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது.

AEFI குழுவின் அறிக்கை இறுதியானது. ஏனெனில் மரணத்திற்கான காரணம் COVID-19 தடுப்பூசியுடன் தொடர்புடையதா என்பதை கண்டறிய இந்த செயல்முறை பல நிலை ஆய்வுகளை உள்ளடிக்கியுள்ளது.

விவேக்கின் ECMO மற்றும் ECG அறிக்கைகள் மாவட்ட AEFI க்கும் பின்னர் மாநில AEFI க்கும் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், இந்த இரண்டு குழுக்களும் ஒரே முடிவுக்கு வந்ததாகவும் AEFI அதிகாரி ஒருவர் கூறினார்.

ALSO READ: நகைச்சுவை மாமேதைக்கு வந்த மாரடைப்பு: காரணம் என்ன? ஊகங்கள் உண்மையானதா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News