தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான போட்டித் தேர்வுகள், நேர்காணல் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.
இந்த பணியிடங்களுக்கான புதிய பாடத்திட்டம் டிஎன்பிஎஸ்சி (TNPSC) இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இதனுடன் மாதிரி வினாத்தாள்களும் வெளியிடப்பட்டது. மேலும் குரூப் 2 தேர்வானது நேர்முத் தேர்வு உள்ள பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகள் என இருவிதமான பதவிகளுக்கும் சேர்த்து ஒரே தேர்வாக நடத்தப்படுகிறது.
ALSO READ | டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம்
அதன்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் நிலைத் தேர்வுகளுக்கு, ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு ரஜினிகாந்த் அறக்கட்டளை பயிற்சி அளித்து தயார்படுத்தும் என ரஜினி ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளர் வி.எம்.சுதாகர் கடந்த 14 ஆம் தேதி தெரிவித்தார். இந்த திட்டத்தை வழக்கறிஞர் எம்.சத்ய குமார் நிர்வகிப்பார் என்றும், ரஜினிகாந்தின் (Rajinikanth) 71-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் அறக்கட்டளை மூலமாக 100 ஏழை மாணவர்களுக்கு இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான https://rajinikanthfoundation.org என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்.,
இந்திய திரைத் துறையின் சூப்பர் ஸ்டார் பத்மபூஷன் ரஜினிகாந்த் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் கல்வியை மேம்படுத்தி அதன் மூலம் ஒரு முற்போக்கான சிந்தனை, தலைமைத்துவம், அறிவியல் மனப்பான்மை, ஜனநாயகமயமாக்கப்பட்ட கல்வி மற்றும் நிலையான பொருளாதார அமைப்பு ஆகியவற்றை அமைப்பதற்காக உருவாக்கப்பட்டது.
எங்களுக்கு உலகளாவிய பார்வை இருந்தாலும் எங்களது ஆரம்ப முயற்சிகளை தமிழ்நாட்டில் மட்டுமே எடுக்க விரும்புகிறோம். தமிழ்நாட்டு மக்களின் கருணையும் அன்பும் தான் தனக்கு இவ்வளவு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது என்று சூப்பர் ஸ்டார் எப்போதும் கூறுவார். எனவே இந்த அறக்கட்டளை தமிழகத்திலிருந்து தொடங்கப்படும்.
அறக்கட்டளை சிறிய ஆரம்பம், முயற்சி, சுய திருத்தம், பிறகு இதுவே இறுதியில் மகத்தான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற கருத்தை நம்புகிறது. தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஆசியுடன், இலவச டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு பயிற்சிக்கான சூப்பர் 100 பிரிவு பதிவை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். பதிவு செய்ய http://rajinikanthfoundation.or/tnpsc.html என்ற இணையதள முகவரியை பின்தொடரவும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ALSO READ | தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்: மீன்வளத் துறைக்கு புதிய ஆணையர் நியமனம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR