கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த விக்னேஷ் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வரும் விக்னேஷ் டெலிவரி செய்ய சாய்பாபா காலனி பகுதியில் சென்றிருக்கின்றார். அப்போது பின்னால் வந்த வாகனம் ஒன்றில் இருந்த இளைஞர்கள், டெலிவரி பாய் விக்னேஷிடம் எதற்காக வழி மறித்து முந்தி செல்கிறாய் என்று கேட்டு வம்பு இழுத்ததாக கூறப்படுகின்றன. மேலும் அவரை கண்ணப்ப நகர் தண்டவாளம் பகுதிக்கு அழைத்து சென்று கட்டி வைத்து சாக்கு பையில் தண்டவாள கருங் கற்கள் எடுத்து சரமாரியாக அடித்ததாக கூறப்படுகின்றன.
இதனால் அவர் முகத்தில், முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரிடம் இருந்து 22 ஆயிரம் மதிப்பிலான செல்போன் , 1500 ரொக்கம் திருடிக் கொண்டு டெலிவரி வாகனத்தை புதறில் தூக்கி எரிந்து விட்டு தப்பி சென்றனர்.
மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் செய்தி: அகவிலைப்படி அதிகரிப்பு அறிவிப்பு விரைவில்
அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள வாலிபர்களை தேடி வருகின்றனர். இதில், பலத்த காயமடைந்த சொமாட்டோ பாய் ஸ்ரீ விக்னேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தலை மற்றும் கண், வாய் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. நான்கு தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாய்பாபா காலனி போலீசார் வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க | வங்கியில் இருந்து கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது இவ்வளவு சுலபமா?
மேலும் படிக்க | தர்மபுரி மாணவி தீக்குளித்து தற்கொலை! வாக்குமூலத்தில் வெளியான சோகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ