தஞ்சை கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்கு விநாடிக்கு 7,235 கன அடி நீர் திறப்பு.
கர்நாடக மாநிலத்தில்கனமழை பெய்த நிலையில் அங்குள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின.
இதனால் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து அதிகம் இருந்து வந்த நிலையில், நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இதனால் 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அணை முழுமையாக நிரம்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், மேட்டூர் அணையில் நீர் இருப்பு 92.53 TMCயாக இருந்தது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடி என்ற முழு கொள்ளளவை நேற்று எட்டியது.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் திருச்சியில் உள்ள கல்லணைக்கு வந்தடைந்தது. கல்லணையில் இருந்து இன்று திறக்கப்பட்ட காவிரி நீர் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வந்தடைந்துள்ளது. இங்கிருந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளுக்கு காவிரி நீர் பிரிந்து சென்றது.
இந்நிலையில் தற்போது தஞ்சை கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்கு விநாடிக்கு 7,235 கன அடி நீர் திறக்கப்பட்டது. மேலும் கல்லணை கால்வாயில் 1,000 கன அடி, கொள்ளிடத்தில் 2,200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.