பொங்கல் பண்டிகை முன்னிட்டு பள்ளி/கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை!!

பொங்கல் பண்டிகையை மாணவர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் பள்ளி-கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (நாளை) விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

Last Updated : Jan 11, 2018, 07:58 AM IST
பொங்கல் பண்டிகை முன்னிட்டு பள்ளி/கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை!! title=

பொங்கல் பண்டிகையை மாணவர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் பள்ளி-கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (நாளை) விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

பொங்கல் பண்டிகை வரும் 13-ம் தேதி முதல் தொடங்கி அடுத்து நான்கு நாட்கள் கொண்டாப்படும். அதாவது 13-ம் தேதி போகியும்(சனிக்கிழமை), 14-ம் தேதி பொங்கலும்(ஞாயிறு), 15-ம் தேதி மாட்டுப்பொங்கலும்(திங்கள்), 16-ம் தேதி காணும் பொங்கலும்(செவ்வாய்) கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகை விடுமுறை குறித்து தமிழக அரசு ஒரு ஆணையை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

'தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நமது மாநிலத்தில் உள்ள அனைவரும் சீரிய முறையில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடுவது வழக்கம். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ-மாணவிகளும் பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடவும், அதன் மூலமாக தமிழர் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் பேணிக் காத்திடவும், வரும் 12-ம் தேதியன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகங்களின் உறுப்புக் கல்லூரிகளுக்கு சிறப்பு நிகழ்வாக இந்த விடுமுறை விடப்படுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Trending News