தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு 44 ஆயிரம் பேர் விண்ணப்பம்!

தமிழகத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கு கடந்த ஜூன் 18ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் மொத்தம் 44 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது. மேலும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு  தரவரிசைப் பட்டியல் வரும் 28ம் தேதி வெளியிடப்படுகிறது.

Last Updated : Jun 20, 2018, 10:17 AM IST
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு 44 ஆயிரம் பேர் விண்ணப்பம்! title=

தமிழகத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கு கடந்த ஜூன் 18ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் மொத்தம் 44 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது. மேலும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு  தரவரிசைப் பட்டியல் வரும் 28ம் தேதி வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, மாநில மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில், மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப வினியோகம், ஜூன் 11 முதல் துவங்கியது. தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரி மற்றும்  சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி  456 எம்பிபிஎஸ் இடங்கள்   30 பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடுக்கு கொடுக்கப்படுகின்றன. 

இதற்கான தர வரிசை பட்டியல் வெளியானதும், ஜூலை 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு  ஜூலை 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்க உள்ளது.

இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனரகம் என்ற இணையதளத்தில் இன்று தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News